கம்பராமாயணம் 7207 · யுத்த 14.149

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீரர் தலை எலாம் அற்ற - (இலக்குவன் அம்புகளால்) அரக்க வீரர்களின் தலையெல்லாம் அற்று வீழ்ந்தன; தாள் எலாம் முற்றும் அற்ற - கால்கள் எல்லாம் முழுவதுமாக அற்று வீழ்ந்தன; தோளாம் மலை எலாம் அற்ற - தோள்கள் என்னும் மலையெல்லாம் அற்று வீழ்ந்தன; பொன்தார் மார்பு எலாம் அற்ற - பொன் மாலைகள் அணிந்த மார்பு எல்லாம் அற்று வீழ்ந்தன; எயிறு எல்லாம் அற்ற - பல் எல்லாம் அற்று வீழ்ந்தன; சூலத்து இலையெல்லாம் அற்ற - சூலப்படைகளின் இலை வடிவான நுனியெல்லாம் அற்று வீழ்ந்தன; கொற்றச் சிலை எலாம் அற்ற - முன்பு வெற்றி ஈட்டித் தந்த வில் எல்லாம் அற்று வீழ்ந்தன; சிந்தி - (அரக்கர் இலக்குவனுக்கு ஆற்றாமல் புறமுதுகிட்டுச்) சிதறி ஓடுவதால்; கற்ற செரு எல்லாம் அற்ற - (அவர்) கற்றிருந்த போர்த்திறம் எல்லாம் (அவரிடமிருந்து) அற்று வீழ்ந்தன.

சொற்பொருட்பின் வருநிலையணி. வீரர் என்ற சொல் இடைநிலைத் தீபமாய், வீரர் தலையெலாம், வீரர் தோள் எலாம் என எல்லாவற்றோடும் கூட்டுமாறு நின்றது. கற்றபின், கற்றவாறு நிற்பதே கல்விப் பயன் (குறள். 391) ஆதலின், போர்க்கல்விக்கு மாறாய், புறமுதுகிட்டு ஓடி கற்ற கல்வியைப் பாழாக்கினர் என்பார். “சிந்தி கற்ற, செருவெலாம் அற்ற” என்றார். “அற்ற” என்ற சொல்லால் இப்பாடல் அழகு பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the heads were severed; all the legs were severed through; all the mountains
  2. that were shoulders were severed; all the gold-garlanded chests were severed; all the leaf-blades
  3. of the tridents were severed; all the warriors' fangs were severed; all the victorious
  4. bows were severed; and, as they scattered, all the warfare they had learned was severed.

What the poem says

The verse hammers on one word, “severed”, repeated eight times. The demons' heads, legs, mountainous shoulders, garlanded chests, teeth, trident blades and victorious bows are all cut away.

Last of all, as they turn and run, their training in war is cut away too: by fleeing they throw away what they learned, when, as the Tirukkuṟaḷ says, the point of learning is to live by it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1talai elām aṟṟa; muṟṟum tāḷ elām aṟṟa; tōḷām
malai elām aṟṟa; poṉ tār mārpu elām aṟṟa; cūlattu
ilai elām aṟṟa; vīrar eyiṟu elām aṟṟa; koṟṟac
cilai elām aṟṟa; kaṟṟa ceru elām aṟṟa, cinti.