கம்பராமாயணம் 7208 · யுத்த 14.150
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேர் எலாம் துமிந்த - (அரக்கர் சேனை வீரர்களின்) தேர்கள் எல்லாம் துண்டாயின; மாவின் திறம் எலாம் துமிந்த - குதிரைகளின் வல்லமையெல்லாம் துண்டாயின; செங்கட் கார் எலாம் துமிந்த - சிவந்த கண்களையுடைய மேகம் போன்ற யானைகள் எல்லாம் துண்டாயின; வீரர் கழல் எலாம் துமிந்த - அரக்க வீரர்களின் வீரக்கழல்கள் எல்லாம் துண்டாயின; கண்டம் தார் எலாம் துமிந்த - கழுத்தில் அணிந்திருந்த மாலைகள் எல்லாம் துண்டாயின; நின்ற தனு எலாம் துமிந்த - கைகளில் ஏந்தி நின்ற விற்கள் எல்லாம் துண்டாயின; தம்தம் போர் எலாம் துமிந்த - தங்கள் தங்களுடைய போர் ஆற்றல் எல்லாம் துண்டாயின; கொண்ட புகழ் எல்லாம் துமிந்து போய - (தாம் இது வரையிலும்) ஈட்டி வைத்திருந்த புகழ் எல்லாம் துண்டு துண்டாகச் சிதறிப் போயின.
சென்ற பாடலில் “அற்ற” எனும் சொல் கொண்டு அழகுறுத்தினார். இப்பாடலில் “துமிந்த” என்னும் சொல்லால் அணி செய்கிறார் சொற்பொருட் பின்வரு நிலையணி, கார் என்பது - உவம ஆகுபெயராய் யானையைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the chariots were shattered; all the horses' might was shattered; all the red-eyed
- dark clouds were shattered; all the warriors' anklets were shattered; all the garlands
- on their necks were shattered; all the bows they held were shattered; all their
- fighting was shattered; and all the fame they had won went shattered away.
What the poem says
A companion to the previous verse, built this time on the word “shattered”. Chariots, the strength of the horses, the red-eyed elephants, here called dark clouds, anklets, neck garlands and bows all go to pieces, and with them the demons' fighting spirit and every bit of fame they had ever won.