கம்பராமாயணம் 7209 · யுத்த 14.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரவு இயல் தறுகண் வன்தாள் ஆள் விழ - பாம்புகளைப் போன்று எதிர்த்துச் சீறுகின்ற அஞ்சாமையுடைய வலிய முயற்சிகள் கொண்ட காலாள் வீரர்கள் களத்தில் வீழ; ஆள்மேல் வீழ்ந்த புரவி மேல் பூட்கை வீழ்ந்த - அந்தக் காலாட்படைகள் மீது விழுந்த குதிரைகள் மேல் யானைகள் விழுந்தன; பூட்கை மேல் பொலந்தேர் வீழ்ந்த - அந்த யானைகளின் மேல் பொன் தேர்கள் வீழ்ந்தன; நிரவிய தேரின் மேன்மேல் நெடுந்தலை கிடந்த - வரிசையாக வீழ்ந்த தேர்களின் மீது நீண்ட தலைகள் சாய்ந்து கிடந்தன; நெய்த்தோர் விரவிய களத்துள் - உதிரம் கலந்து கிடந்த (அந்த) யுத்த களத்தில்; எங்கும் வீழ வெள்ளிடை அரிது - எவ்விடத்திலும் இனி வேறொன்று வீழ வெற்றிடம் இல்லை. அடித்த கோலுக்கு அஞ்சாது, எதிர்த்துச் சீறும் வீரம் பாம்புக்குள்ளது ஆதலின், “அரவு இயல்தறுகண் வன்தாள் ஆள்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the foot soldiers, fearless as snakes, strong-legged, fell, on the horses
- fallen on the men fell elephants; on the elephants fell golden chariots;
- on the chariots lying in rows, one on another, lay tall heads;
- across the field soaked in blood there was scarcely an open space for anything to fall.
What the poem says
The dead pile up in layers: foot soldiers, as fearless as snakes that strike back at the stick that hits them, are at the bottom, horses fall on them, elephants on the horses, golden chariots on the elephants, and severed heads on the chariots. Nowhere on the bloody field is there room for one more body to fall.