கம்பராமாயணம் 7210 · யுத்த 14.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடுப்பின்கண் - (இலக்குவன் கணைகளை விடும்) வேகத்தில்; அமரரேயும் - தேவர்களும்; கார் முகத்து - வில்லிலிருந்து; அம்பு கையால் தொடுக்கின்றான் - அம்புகளைக் கையால் தொடுக்கின்றான் என்பதும்; துரக்கின்றான் என்று - விடுக்கின்றான் என்பதும்; உணர்ந்திலர் - யாரும் கண்டவர் இல்லை; துரந்த வாளி - செலுத்திய அம்பு; இடுக்கு ஒன்றும் காணார் - சென்று பற்றுவதைச் (சிறிதும்) கண்டவர் (எங்கும்) இல்லை; காண்பது - (அந்த வானவர்கள்) காண்பதெல்லாம்; எய்த கோல் - விடுத்த அம்புகள்; பல்கால் நொய்தின் எய்தி - பலமுறை எளிதாகச் சென்று; படுக்கின்ற பிணத்தின் - கீழே வீழ்த்துகின்ற பிணங்களின்; பம்மல் குப்பையின் - அடர்ந்து மூடிய குவியலின்; பரப்பே - பரப்பினையேயாகும்.
கடுப்பு - விரைவு. விழிகள் மிக விரைவான செயல்களைத் தொடர்ந்து அவ்விரைவில் பற்றி மனத்துக்குக் காட்டும் திறன் இல்லாதது எனும் அறிவியல் உண்மையைக் கவிஞர் பிரான் இங்குத் தெளிவுறக் காட்டுவது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the speed of it, even the immortals did not perceive
- “he fits the arrow to the bow with his hand, he looses it”; they saw no gap
- where the loosed arrows struck; all they saw, again and again,
- was the spread of the dense heaps of corpses the swift-flying shafts laid low.
What the poem says
Ilakkuvaṉ shoots so fast that even the gods cannot see him fit an arrow or release it, nor see where it hits. All they can see is the result: ever-growing mounds of corpses.
The commentary admires the poet's grasp of a fact about vision, that the eye cannot follow very fast movement and only takes in the outcome.