கம்பராமாயணம் 7214 · யுத்த 14.156

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காற்று உறழ் கலினமான் தேர் - காற்றைப் போன்ற வேகமுடைய கடிவாளம் பூண்ட குதிரைகள் பூட்டிய தேரினை; கடிதினில் கடாவி - விரைவாகச் செலுத்தி; இலங்கை வேந்தன் - இராவணன்; கண்ணுற்று - (இலக்குவனை) நேருக்கு நேர் சந்தித்து; ஏற்றனன் - எதிர்த்தான்; இராமன் தம்பி - இலக்குவன்; எரிவிழித்து - தீப்பொறி பறக்க விழித்துப் பார்த்து; கூற்றுமால் கொண்டது அன்ன - (அப்போது) கூற்றுவன் பித்துக் கொண்டவன் ஆனது போல; குறுகச் சென்றான் - இராவணனின் சேனைப்பக்கம் சென்று; கொல்கின்றான் - (அரக்கர் சேனையை) கொலை புரிந்தான்; சீற்றமும் தானும் நின்றான் - சினமும் தானுமாக நின்றான்; பாதம் சிறிதும் பெயர்ந்திலன் - தன் அடியைச் சிறிது கூடப் பின் வைத்தான் இல்லை.

குதிரையின் வேகம் காற்றின் வேகத்திற்கு ஒத்தது ஆதலின், “காற்று உறழ் கலின மான்” என்றார் மான் - குதிரை. பிறமான்களிலிருந்து வேறுபடுத்தக் “கலினமான்” என்றார் இலக்குவன் அரக்கர் படையைக் கொன்று குவித்த பாங்கைக் கண்ணுற்றால், எமனுக்குப் பைத்தியம் பிடித்துக் கொண்டதோ என எண்ணுமாறிருந்ததால், “கூற்று மால் கொண்டது என்ன” என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Driving swiftly his chariot of bridled horses swift as the wind,
  2. the king of Ilaṅkai came face to face and met him; Irāmaṉ's brother, glaring fire,
  3. killing as though Death had gone mad, went close to him;
  4. he stood there, he and his fury; he did not move his feet back even a little.

What the poem says

Irāvaṇaṉ drives his wind-fast chariot straight at Ilakkuvaṉ. Ilakkuvaṉ, eyes blazing, goes to meet him, cutting down demons as he goes so wildly that it is as if Death had gone mad. Then he stands his ground, all fury, and does not give back a single step.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṟṟu uṟaḻ kaliṉa māṉ tēr kaṭitiṉiṉ kaṭāvik kaṇṇuṟṟu
ēṟṟaṉaṉ ilaṅkai vēntaṉ eri viḻittu irāmaṉ tampi
kūṟṟu māl koṇṭatu eṉṉak kolkiṉṟāṉ kuṟukac ceṉṟāṉ
cīṟṟamum tāṉum niṉṟāṉ; peyarntilaṉ ciṟitum pātam.