கம்பராமாயணம் 7215 · யுத்த 14.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காக்கின்ற என் நெடுங்காவலின் வலி நீக்கிய கள்வா! - (பிராட்டியைக்) காத்துக் கொண்டிருந்த என் பெருங்காவலின் வலிமையை (வஞ்சத்தால்) நீக்கிவிட்டு (ஏமாற்றிய) கள்வனே! உனக்கு இன்று போக்கு அரிது - நீ இன்று தப்பிப் போவது இயலாது; எனப்புகன்றான் - என்று கூறினான் (இலக்குவன்); புகை உயிர்ப்பான் - சினத்தால் புகை தோன்றுமாறு பெருமூச்சு விட்டான்; கோக்கின்றன தொடுக்கின்றன - வில்லில் கோக்கும் தன்மையனவும் தொடுக்கும் தன்மையுடையனவும்; தலையோடு ஈர்க்கின்றன - தலையினை இழுத்துச் செல்வதற்கு உரியனவும்; கனல் ஒப்பன - தீயைப் போன்றவையும் ஆன; கொலை அம்புகள் - கொலைத்தொழிலில் வல்ல அம்புகளை; எய்தான் இகல் செய்தான் - எய்தவனாய் போர் புரிந்தான்.
இப்பாடல் முதல் 28 பாடல்கள் போர்க்குரிய விரையும் மிடுக்கும் அமைந்த சந்தக் கலிவிருத்தங்களாம். வீர வார்த்தையாடலுக்கும், வீரச் செயல்புரிகைக்கும், சினம் என்னும் மெய்ப்பாட்டை வெளிப்படுத்தற்கும் இவை ஏற்றனவாய் அமைந்துள்ளன. இராவணன் தன் காவலுக்கு இழுக்கு ஏற்படுமாறு வஞ்சித்துப் பிராட்டியைக் கொணர்ந்ததால் “காக்கின்ற என் நெடுங்காவலின் வலி நீக்கிய கள்வா!” என்று கொதித்துரைத்தான். மானின்பின் தங்களை அனுப்பி வஞ்சித்துக் கொணர்ந்தமை தோன்ற, “கள்வா!” என்றான், கோக்கின்றன; தொடுக்கின்றன; தலையோடு ஈர்க்கின்றன - அம்பின் வகைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Thief, who got past the strength of the long watch I was keeping!
- Today there is no escape for you,” he said; breathing smoke,
- he shot killing arrows, arrows to be fitted, arrows to be strung,
- arrows that drag off heads, like fire; and he fought.
What the poem says
Ilakkuvaṉ shouts at Irāvaṇaṉ: “Thief! You got past the guard I was keeping over her. Today there is no escape for you.” He means the trick by which Irāvaṇaṉ lured both brothers away after the golden deer and carried off Cītai. Breathing smoke in his anger, he shoots arrows of several kinds, fiery and deadly.
This verse begins a run of twenty-eight verses in a fast, driving metre suited to battle, heroic taunts and anger.