கம்பராமாயணம் 7216 · யுத்த 14.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எய்தான் சரம் எய்தா வகை - (இவ்வாறு) எய்தவனாகிய இலக்குவனது அம்புகள் தன் மேற்படாத வகையில்; இடையே இற்றீக என வைதால் என - இடையே இற்று ஒழியட்டும் என்று (அவ்வம்புகளை ஒருவர்) சபித்தாற்போல; ஐதாயின - அவை எளிதாகுமாறு; வடிவாளியின் அறுத்தான் - கூரிய கணைகளால் (இராவணன்) துண்டித்து வீழ்த்தினான்; (அப்போது) துயில் பிரிந்தான் - உறக்கத்தைத் துறந்தவனாகிய இலக்குவன்; ஐது ஆதலின் அறுத்தாய் - அவ்வம்புகள் சிறியவையாதலின் அறுத்து எறிந்து விட்டாய்; இனி அறுப்பாய் என - இனி அறுத்துவிடு (பார்ப்போம்) என்று; அழிகார் பெய்தால் என - உலகத்தையழிக்கும் ஊழி மேகம் மழை பெய்தால் போன்ற; சரமாரிகள் சொரிந்தான் - அம்பு மழை பொழிந்தான்.
எய்தான், துயில் துறந்தான். வினையால் அணையும் பெயர்கள். ஒருவர் சாபமிட்டு அழித்தாற் போல இருந்தது என்பார். “சரம் எய்தாவகை இற்றிகென இடையே வைதால் என அறுத்தான்” என்றார். “சொல் ஒக்கும் கடிய வேகச்சுடுசரம்” (கம்ப. 394) என்பதனையும் நோக்குக. தற்குறிப்பேற்றம். துயில் துறந்தான் - இலக்குவன். “மனையின் வாழ்வும் உறக்கமும் மாற்றினான்” (கம்ப. 8154) “கங்குல் எல்லை காண்பளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்” (கம்ப. 2344) “உறக்கம் என்பதனை ஓடமுனிந்தான்” (கம்ப; 6881) “என் உயிர் காவலில் நின்று இமையாதவன்” (கம்ப. 36/6) என்னும் புண்ணியன் கண்ணும், வன்தோள் தம்பி போன்ற அன்றே” (கம்ப. 3545) என நூல் நெடுகிலும் இலக்குவன் துயிலாமையைச் சுட்டிச்செல்லும். கவிஞர் பிரான் இங்கும் “துயில் துறந்தான்” எனும் வினைப்பெயர் ஈந்தார் உறங்காவில்லி என்றொரு பெயரும் உண்டு. “சொரிந்தான் துயில் பிரிந்தான்” என்பதில் கடை எதுகை தரும் சொல்லின்பத்தை ஓஇயுணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the archer's shafts should not reach him, as if someone had cursed them
- “Break in mid-flight!”, he cut them down with sharp arrows as if they were nothing;
- “You cut them because they were slight; now cut these!” said he,
- and he who had given up sleep poured down showers of arrows like the world-ending clouds.
What the poem says
Irāvaṇaṉ cuts down Ilakkuvaṉ's arrows in mid-air so easily that it looks as if someone had put a curse on them to break before they arrived. Ilakkuvaṉ retorts, “Those were small ones; let's see you cut these!” and lets loose a storm of arrows like the clouds that drown the world at its end.
Ilakkuvaṉ is called “he who gave up sleep”: throughout the epic he goes without sleep to stand guard over Irāmaṉ and Cītai, and is known as the sleepless archer.