கம்பராமாயணம் 7217 · யுத்த 14.159

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறம் மறுத்தான் - அறச் செயல்களைத் (தன் வாழ்வில்) மறுத்து எறிந்து விட்டவனான இராவணன்; ஆம் குஞ்சரம் அனையான் விடும் - (வலிமை) கூடிய யானையைப் போன்றவனான இலக்குவன் எய்கின்றவும்; வீங்கும் சரம் பருவத்து - மழை மிகும் சரற்காலத்து; இழிமழை போல்வன - பெய்கின்ற மழை போல்வனவுமாகிய; அயில் வாளிகள் அவைதாம் விலக்கா - கூரிய அம்புகளாகிய அவை அனைத்தையும் தடுத்து; சுடர் வேலவற்கு இளையான் - ஒளிர்கின்ற வேல் வல்ல இராமனின் தம்பியாகிய இலக்குவன்; தூங்கும் சர நெடும் புட்டிலில் - (முதுகில்) தொங்குகின்ற அம்புகளையுடைய நெடிய அம்பறாத் தூணியிலிருந்து; வாங்கும் சரம் வாங்கா வகை - எடுக்கும் அம்புகளையும் மேலும் எடுக்க இயலாதவாறு; அறுத்தான் - அம்பறாத் தூணியை அறுத்து வீழ்த்தினான்.

“சுடர் வேலவற்கு இளையான்” எனும் பாடத்திலும் சிறந்ததாக “சுடர் வில்லினாற்கு இளையான்” எனும் பாடம் கொள்வாரும் உளர் ஆயின் ஓசைச் சிறப்புக் குறையும். சரற்காலத்தே இடைவிடாது மழை பொழிவது போல, இடைவிடாது சரமழை பொழிய உதவும் அம்பறாத் தூணி என்பார் “வீங்கும் சரம் பருவத்து இழி மழைபோல்வன விலக்காத தூங்கும் சர நெடும் புட்டில்” என்றார் இலக்குவன் விடும் சரமழைகளைத் தடுக்க இயலாத இராவணன், அம் மழை தோன்றும் மூலத்தானமாகிய அம்பறாத் தூணியை அறுத்தெறிந்தான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to ward off the sharp arrows loosed by him who was like a mighty elephant,
  2. which were like the rain that pours down in the swelling autumn season,
  3. he who rejected dharma cut the long hanging quiver full of arrows
  4. of the younger brother of the bright-speared one, so that he could draw no more.

What the poem says

Irāvaṇaṉ, who has turned his back on dharma, cannot hold off Ilakkuvaṉ's arrows, which pour down like the steady rains of autumn. So he goes for their source and shoots through the long quiver hanging on Ilakkuvaṉ's back, leaving him nothing to draw.

The commentary notes a variant reading that calls Irāmaṉ “the bright-bowed one” instead of “the bright-speared one”, and prefers the latter for its sound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ām kuñcaram aṉaiyāṉ viṭum ayil vāḷikaḷ avaitām
vīṅkum caraṟ paruvattu iḻi maḻai pōlvaṉa vilakkā
tūṅkuñ cara neṭum puṭṭiliṉ cuṭar vēlavaṟku iḷaiyāṉ
vāṅkuñ caram vāṅkāvakai aṟuttāṉ aṟam maṟuttāṉ.