கம்பராமாயணம் 7219 · யுத்த 14.161

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெலியா நெடுவலியால் - (என்றும்) தளராத பேராற்றல் கொண்டு; உலகு ஒரு மூன்றையும் வென்றாய் - மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டாய்; திசை திரித்தாய் - திக்குகளில் எல்லாம் (திக்குவிசயம்) சென்று மதயானைகள் கொம்புகளைத் திருகினாய்; செறிகழல் இந்திரன் இசையைத் தின்றாய் - வீரக் கழல் பொருந்திய இந்திரன் புகழை (உன் வெற்றியால்) விழுங்கினாய்; என்றாலும் - (இவ்வளவு புகழ் மிக்கவன் நீ) என்றாலும்; இன்று - இப்போது; உன் வயின் அழிவு எய்தும் - உனக்கு அழிவு வந்தடையும்; என இசையா நின்றான் - என்று கூறியவனாய், அவன் எதிரே - இராவணன் எதிரே போய்; உலகு அளந்தான் என நிமிர்ந்தான் - உலகினை யளந்த திருவிக்கிரமனைப் போல நிமிர்ந்தவனாகிய அனுமன் நின்றான்.

இந்திரனின் வலி அழிந்ததை அரக்கப் பண்புக்கேற்ப தின்றாய் என்ற சொல்லால் குறித்த சொல் நயம் அறிக. உலகளந்த திருமால் என அனுமன் பேருரு (விசுவரூபம்) எடுக்கும் ஆற்றல் உடையவன். கிட்கிந்தா காண்டத்தும் சுந்தரகாண்டத்தும் அவன் பேருருவம் எடுத்தது அறிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You conquered all three worlds by your unfailing, mighty strength;
  2. you devoured the fame of Intiraṉ of the close-set anklets; you turned the quarters about;
  3. even so, today destruction will come upon you,” he declared,
  4. and stood before him, towering up like him who measured the worlds.

What the poem says

Aṉumaṉ admits Irāvaṇaṉ's achievements: he conquered the three worlds, swallowed up Intiraṉ's glory, the word “devoured” fitting a demon, and twisted the tusks of the elephants that guard the directions. Even so, Aṉumaṉ tells him, today he will be destroyed.

Then Aṉumaṉ grows to giant size, like Viṣṇu when he grew from a dwarf to measure the worlds; he has taken such cosmic forms before in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟāy ulaku oru mūṉṟaiyum, meliyā neṭu valiyāl;
tiṉṟāy ceṟi kaḻal intiraṉ icaiyai; ticai tirittāy;
eṉṟalum, iṉṟu aḻivu uṉvayiṉ eytum, eṉa icaiyā,
niṉṟāṉ avaṉ etirē, ulaku aḷantāṉ eṉa nimirntāṉ.