கம்பராமாயணம் 7220 · யுத்த 14.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வலத் தடக்கையினை எடுத்தான் - அனுமன் தனது அகன்ற வலக்கரத்தினை உயரத் தூக்கினான்; இது போய் உலகெலாம் அடுத்தான் - இக்கரமே உலகு எல்லாம் பரவுமாறு ஆனான்; குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் - வாமன அவதாரமாய் உலகளந்தவன் திருவடி வருகை தந்தது போன்றவனாய்; மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என - அத்திருவடி மீண்டும் இங்கு வந்து வளரத் தொடங்குவது போல்; உருவம் வளர்கின்றவன் - தன் உருவம் ஆனது வளர்கின்றவனாய்; கடு தான் எனக் கொடியாற்கு - (உலகில் உள்ள) நஞ்சு எல்லாம் தானே எனத்தக்க கொடியோன் ஆகிய இராவணனுக்கு, காண்பாய் எனக் காட்டா - என் உருவத்தைப் பார்ப்பாயாக எனக் காட்டி.
உலகளந்த திருமாலின் திருவடியே அனுமானாக மீண்டும் வந்துள்ளது என்னுமாறு உலகுக்கு வந்துள்ள அனுமன், அத்திருவடி வளரத் தொடங்கியது போல மேலும் வளர்ந்தான் என்பாராய், “குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான், மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்ந்தான்” என்று மொழிந்தார் அனுமான் பேருருவமெடுக்கையில், உலகளந்த திருவடிக்கு முன்பும் (4736) உவமிப்பார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He raised his great right hand; it went up and reached through all the world;
- he who was like the coming of the holy foot of the dwarf who measured the worlds,
- growing as though that foot had come back there and begun to grow again,
- showed it to the cruel one, who was poison itself, saying “Look!”
What the poem says
Aṉumaṉ raises his right hand, and it seems to fill the whole world. He is like the foot of Viṣṇu in his dwarf form, the foot that grew to stride across the universe, come back and growing again.
He holds up his fist to Irāvaṇaṉ, who is cruelty and poison itself, and says: “Look at this.” The sentence carries on into the next verse.