கம்பராமாயணம் 7221 · யுத்த 14.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில் ஆயுதம் முதலாகிய வய வெம்படை எல்லாம் - விற்படை முதலாகிய ஆற்றல் வாய்ந்த கொடிய போர்க்கருவிகளை யெல்லாம்; மிடலோடு இடை பயின்றாய் - வல்லமையோடு இவ்வுலகில் பயின்றுள்ளாய்; புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் - இருபது தோள்கள் இணையப் பெற்றாய்; செருவலி வல்லாய் - போரில் வல்லமையுள்ளாய்; ஆய்திறன் மறவோய்! - ஆயுந்திறமையும் கூடிய வீரனே!; இதன் எதிரே நில்லாய் - போர் இடுவதற்கு இப்போது என்கை எதிரே நிற்பாயாக!; என நிகழ்த்தா - என்று கூறி; நெடு நெருப்பாம் என - பெரிய தீயினைப் போன்று; உயிர்ப்பான் - (வெப்பப்) பெருமூச்சு விட்டான். இருபது புயங்களைப் பெற்றுள்ளமையால், போர் செய்தற்கு ஆள் இல்லாமல் போயினாய் எனும் பொருளில் “இல்லாய் செரு” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You have mastered with might all the fierce, strong weapons, the bow first of all;
- you are joined with shoulders four times five;
- you are able in war; you are strong; warrior of skill!
- Stand before this,” he said, breathing out like a great fire.
What the poem says
Aṉumaṉ goes on, breathing like a blazing fire. Irāvaṇaṉ, he says, has mastered the bow and every other weapon, has twenty arms and is a strong, skilled fighter. Now let him stand up to this, meaning Aṉumaṉ's raised fist.