கம்பராமாயணம் 7222 · யுத்த 14.164
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் - (அனுமன் இராவணனை நோக்கி) மிக்க வீரத்துடனே என் எதிரே நின்றாய்; இஃது ஒன்றோ? - இது ஒரு பொருளோ? வாள் ஆண்மையும் - (உன்னுடைய) வாள் ஆற்றலும்; உலகு ஏழினோடு உடனே உடை வலியும் - ஏழ் உலகங்களையும் ஒரு சேர அழிக்க வல்ல (உன்) வலிமையும்; தாளாண்மையும் - (உன்) முயற்சியும்; ஆரும் நிகர் இல் தனி ஆண்மையும் - எவரும் நிகர் ஆகாத (உன்) தனிப்பட்ட ஆற்றலும்; நின் தோள் ஆண்மையும் - உன்னுடைய தோளின் ஆற்றலும் (ஆகிய அனைத்தையும்); இசையோடு உடன் - (உன்) புகழோடு சேர்த்து; ஒரு புடைப்பால் இனித் துடைப்பேன் - ஒருகுத்தால் (நான்) இப்போது ஒழித்துக் கட்ட உள்ளேன் (என்றான்).
ஒரு குத்தால் என்பதால் முன்பாடலில் “இதன் எதிரே நில்லாய்” என்பது அனுமன் கையைக் குறித்ததாகக் கொள்ளப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You have stood against me with great manliness; is that all?
- Your prowess with the sword, the strength that holds the seven worlds together,
- your persistence, your peerless and unmatched manhood, and now
- the might of your shoulders, I shall wipe out with your fame, with a single blow.”
What the poem says
Aṉumaṉ boasts that one punch will wipe out everything Irāvaṇaṉ is proud of: his skill with the sword, the strength that could shake all seven worlds, his drive, his unmatched courage, the power of his arms, and his fame along with them.
Because he speaks of a single blow, the “this” of the previous verse is taken to mean his fist.