கம்பராமாயணம் 7223 · யுத்த 14.165

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘பரக்கப் பல த்து என்? படர் கயிலைப் பெருவரைக்கும்,
அரக்கு உற்று எரி பொறிக் கண் திசைக் கரிக்கும், சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய்! உரன் உடையாய்
குரக்குத் தனிக் கரத்தின் புடை புடைப்பு ஆற்றுதி கொல்லாம்.

பொருள் · Meaning in Tamil

பரக்கப் பல உரைத்து என்? - விரித்துப் பலபட உரைப்பது எதற்கு?; படர் கயிலைப் பெருவரைக்கும் - படர்ந்து விரிந்துள்ள கயிலை மலை என்னும் பெரிய மலைக்கும், அரக்கு உற்று எரி - (சாதிலிங்கம் போன்ற) செந்நிறத்தோடு எரிகின்ற; பொறி கண் திசைக் கரிக்கும் - நெருப்புப் பொறி பறக்கும் கண்களையுடைய திக்கு யானைகளுக்கும்; சிறிது அனுங்கா - சிறிதும் பின்னிடாத, உரக்குப்பையின் உயர்தோள் பல உடையாய்! - வலிமை குவிந்து கிடக்கும் உயர்ந்த தோள்கள் பலவற்றையுடையவனே!; உரன் உடையாய் - ஆற்றல் சிதையாதவனே!; குரக்குத் தனிக்கரத்தின் - (இப்போது) குரங்காகிய என்னுடைய ஒரு கரத்தால்; புடைப்பொறை ஆற்றுவை கொல்? - குத்தும் குத்தின் வலிமையைத் தாங்கிக் கொள்ளும் வலிமை உனக்கு உண்டோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Why say more at length? You with many lofty shoulders, heaps of strength,
  2. that did not flinch at all before the great sprawling mountain Kayilai
  3. or the elephants of the quarters, whose eyes blaze red as lac and shoot sparks!
  4. You who are strong, can you bear the weight of a blow from one monkey's hand?”

What the poem says

Aṉumaṉ cuts his speech short with a direct challenge. Irāvaṇaṉ's many shoulders did not give way when he lifted Mount Kayilai or wrestled the fiery-eyed elephants of the quarters. But can they bear one punch from a single monkey's hand?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘parakkap pala uraittu eṉ? paṭar kayilaip peru varaikkum,
arakkuṟṟu eri poṟik kaṇ ticaik karikkum, ciṟitu aṉuṅkā
urak kuppaiyiṉ uyar tōḷ pala uṭaiyāy! uraṉ uṭaiyāy
kurakkut taṉik karattiṉ puṭaip poṟai āṟṟuvai kollām.