கம்பராமாயணம் 7224 · யுத்த 14.166

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்றே புரை தோளாய்! - மலை போன்ற தோள்களை யுடையவனே! என் தோள் வலி அதனால் - என்னுடைய தோள் வலிமையினால், எடுத்து - என் கையை உயர்த்து; யான் எற்றவும் - நான் குத்தவும்; இறவா நின்றாய் எனில் - நீ மடியாமல் இருப்பாய் என்றால்; எனை நீ பின் நின்கைத்தல நிரையால் - என்னை நீ பிறகு உன்னுடைய கைகளின் வரிசையினால்; மிடல் கொடு குத்துதி - (முழு) ஆற்றலோடு குத்துவாயாக; குத்த - (அப்படிக்) குத்தியபின்பும்; பொன்றேன் எனின் - (நான்) மடியாமல் இருந்தேன் ஆகில்; நின்னோடு எதிர் பொருகின்றிலேன் - உன்னோடு (அதற்குப் பிறகு) போர் இடேன்; என்றான் - என்று கூறினான்.

ஒரு குன்றுதான் மற்றொரு குன்றினை அசைக்க முடியும் என்க. “குன்றே” ஏகாரம் பிரிநிலை. யூன் ஒரு கரத்தால் குத்துவதாகவும் அக்குத்துக்கு இராவணன் தப்பினால் அவன் இருபது கரங்களாலும் குத்தலாம் என்பதாகவும் கூறியதில் தன் வலிமை இற்றெனத் தன்னம்பிக்கையோடு அனுமன் கூறும் திறம் குறித்திடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If, when I raise my arm with the strength of my shoulder and strike,
  2. you remain alive, then afterwards, with the ranks of your hands,
  3. you whose shoulders are like mountains, strike me with all your might; if, struck,
  4. I do not die, I will fight you face to face no more,” he said.

What the poem says

Aṉumaṉ sets the terms. He will hit Irāvaṇaṉ once with one hand. If Irāvaṇaṉ survives, he may hit Aṉumaṉ back with all twenty hands at full strength, and if Aṉumaṉ survives that, he will never fight Irāvaṇaṉ again.

The offer shows how sure Aṉumaṉ is of his own strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉ tōḷ valiataṉāl eṭuttu yāṉ eṟṟavum, iṟavā
niṉṟāy eṉiṉ, nī piṉ eṉai niṉ kait tala niraiyāl,
kuṉṟē purai tōḷāy! miṭalkoṭu kuttuti; kuttap
poṉṟēṉ; eṉiṉ, niṉṉōṭu etir porukiṉṟileṉ ‘eṉṟāṉ.