கம்பராமாயணம் 722 · பால 11.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பல் இயம் - பல்வேறு வாத்தியங்கள்; துவைத்த - முழங்கக் கூடிய; கடைத்தலையாய் - தலைவாசலையுடைய சனக மன்னனே!; அயன் புதல்வன் - (முன் சொன்ன) அய மன்னனின் மகனாகிய; தயரதனை - தசரத மன்னனை; அறியாதார் இல்லை - அறியாதவர்கள் (இந்த உலகில்) யாரும் இல்லை; அவன் பயந்த - (உலகப் புகழ் வாய்ந்த) அந்த மாமன்னன் பெற்ற; குலக்குமரர் - குலத்தின் சிறந்த மைந்தர்களாகிய; இவர்தமக்கு - இவர்களுக்கு; உள்ள - இருக்கின்ற; பரிசு எல்லாம் - சிறந்த இயல்புகள் முழுவதையும்; நயந்து உரைத்து - விருப்பத்தோடு சொல்லி; கரை ஏற - (இவர்களின் புகழ்க் கடலினது) கரையைச் சேர்வதற்கு; நான்முகற்கும் - பிரமனுக்கும்; அரிது ஆம் - அரியதாகும்; யான் அறிந்தபடி - (இருப்பினும்) அதை நான் அறிந்தபடி, கேளாய் - சிறிது சொல்லக் கேட்பாயாக.
நான்கு முகமுடைய பிரமனுக்கும் ஓரளவே உணர்த்தக் கூடிய இராமலக்குவரது வரலாற்றை ஒரு முகமுடைய மனிதனாகிய என்னால் எவ்வாறு முழுதும் கூற இயலும்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There is none who does not know Tacarataṉ, son of Ayaṉ. To tell lovingly
- all the excellences of these princes of the line whom he begot
- and reach the far shore would be hard even for the four-faced one; O you at whose gateway
- many instruments resound, hear it as far as I know it.'
What the poem says
Everyone knows Tacarataṉ, son of Aja. But to describe fully the qualities of his sons would defeat even four-faced Brahmā, so how could a man with only one mouth do it? Still, Vicuvāmittiraṉ offers to tell Caṉakaṉ what he knows.