கம்பராமாயணம் 723 · பால 11.14

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துனி இன்றி - துன்பம் இல்லாமல்; உயிர் செல்ல - (உலகத்திலுள்ள) உயிர்கள் யாவும் வாழும்படி; சுடர் ஆழிப் படை - ஒளிமிக்க திருமாலின் சக்கரப்படை போன்ற; வெய்யோன் - சூரியன்; பனி வென்றபடி என்ன - பனியை (எளிதாக ஒழித்து) வெற்றி கொண்ட தன்மைபோல; பகை வென்று - பகையரசர்களை (எளிதில்) வெற்றி கொண்டு; படி காப்போன் - உலகத்தைக் காப்பவனும்; தனு அன்றி - (தன்) கை வில்லை அல்லாமல்; துணை இல்லான் - வேறு துணையாக (எதையும் யாரையும்) விரும்பாதவனும்; தருமத்தின் கவசத்தான் - தருமத்தையே கவசமாகக் கொண்டவனும்; மனுவென்ற நீதியான் - (அரச தர்ம சாத்திரங்களை இயற்றிய) மனுவையே நீதிநெறியில் வென்றவனும் ஆகிய தசரதன்; மகவு இன்றி வருந்துவான் - குழந்தைப் பேறு இல்லாமல் மன வருத்தம் உற்றிருந்தான்.

சூரியன் - மன்னனுக்கும், பனி - பகைவர்க்கும், ஒளி - வில்லுக்கும் உவமையாகும். தனுவன்றித் துணையில்லான் - ஆற்றல் மிக்க வீரன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who guards the earth, conquering his foes so that lives may go on without distress,
  2. as the hot sun with its bright discus of rays conquers the mist;
  3. who had no ally but his bow, whose armour was dharma,
  4. whose justice surpassed Maṉu's — he grieved for want of a child.'

What the poem says

Vicuvāmittiraṉ describes Tacarataṉ: he protects the world by defeating his enemies as easily as the sun burns off the mist; he needs no ally but his bow; righteousness is his armour; his justice outdoes even Maṉu, the lawgiver. Yet this ideal king was grieved because he had no son.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tuṉi iṉṟi uyir cellac, cuṭar āḻip paṭai veyyōṉ
paṉi veṉṟapaṭi eṉṉap, pakai veṉṟu paṭi kāppōṉ,
taṉu aṉṟit tuṇai illāṉ, tarumattiṉ kavacattāṉ,
maṉu veṉṟa nītiyāṉ, makavu iṉṟi varuntuvāṉ.'