கம்பராமாயணம் 724 · பால 11.15

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சிலைக் கோட்டு நுதல் குதலைச் செம் கனி வாய், கரும் நெடும் கண்,
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல், மின் நுடங்கும் இடையாரை,
முலைக் கோட்டு விலங்கு என்று அங்கு உடன் அணுகி, முன் நின்ற
கலைக்கோட்டுத் திரு முனியால், துயர் நீங்கக் கருதினான்.'

பொருள் · Meaning in Tamil

சிலைக் கோட்டு நுதல் - வில்லைப் போல வளைந்த நெற்றியையும், குதலைச் செங்கனிவாய் - (குழந்தைகளின்) மழலை போல இனிய சொற்களைப் பேசுகின்ற சிவந்த கொவ்வைப் பழம் போன்ற வாயையும்; கரு நெடுங்கண் - கரிய நீண்ட கண்களையும், விலைக்கு ஓட்டும் - விலைப் பொருளுக்குத் தருகின்ற, பேரல்குல் - பெரிய அல்குலையும்; மின் நுடங்கும் - மின்னல் கொடிபோலத் துவளுகின்ற, இடையாரை - சின்ன இடையையும் உடைய வேசியரை; முலைக்கோட்டு - தனங்களாகிய கொம்புகளையுடைய; விலங்கு என்று - சில மிருகங்கள் என்று கருத; தொடர்ந்து அணுகி - தன் ஆச்சிரமத்திலிருந்து அவ் விலைமாதர்களைத் தொடர்ந்து; முன்நின்ற - (உரோம பாத மன்னனது) முன்னே வந்து சேர்ந்த; கலைக் கோட்டுப் பெயர் - கலைக் கோட்டு முனிவன் என்னும் பெயர் தாங்கிய; முனியால் - முனிவனைக் கண்டு; துயர் நீங்கக் கருதினான் - (குழந்தைப் பேறு இல்லாத) தன் துயரத்தைப் போக்கிக் கொள்ள நினைந்தான்.

கலைக்கோட்டு முனிவன் - தலையில் கொம்பு உடையவன். ருசியசிருங்கர் - வடமொழி வழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Women with bow-curved brows, red fruit-lips lisping sweet words, long dark eyes,
  2. broad hips offered for a price and waists that quiver like lightning —
  3. taking them for beasts with horns that were breasts, he followed them and came
  4. to stand before the king; by that sage named for the deer's horn, he thought to end his grief.'

What the poem says

Tacarataṉ resolves to end his childlessness through the sage Kalaikkōṭṭu Muṉivaṉ (Ṛṣyaśṛṅga, "deer-horn"), so called for the horn on his head. Raised in the forest, he had never seen a woman. When courtesans were sent to lure him out, he took them for strange animals whose breasts were horns and innocently followed them to the court of King Rōmapāda. Tacarataṉ now seeks this sage's help.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cilaik kōṭṭu nutal kutalaic ceṅ kaṉi vāy, karu neṭuṅ kaṇ,
vilaikku ōṭṭum pēr alkul, miṉ nuṭaṅkum iṭaiyārai,
mulaik kōṭṭu vilaṅku eṉṟu toṭarntu aṇuki, muṉ niṉṟa
kalaik kōṭṭup peyar muṉiyāl, tuyar nīṅkak karutiṉāṉ.'