கம்பராமாயணம் 7226 · யுத்த 14.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடியோய் - பேருருவு எடுத்தவனே!; ஒரு நீ - தனியாக உள்ள நீ; ஆயுதம் ஒன்று உடையாய் அல்லை - போர் ஆயுதம் எதுவும் உடையாயும் அல்லை; எனது உறவும் கொன்றாய் - (அப்படியிருந்தும், வெறுங்கையால்) என்னுடைய சுற்றத்தார் (பலரைக்) கொன்றுள்ளாய், நிமிர் கொடுவெம் சிலை கோலி - உயர்ந்ததும் வளைந்ததும் கொடியதுமான வில்லை வளைத்து; வன் தானையினுடன் - வலிமை மிக்க சேனையோடு; உயர் தேர் மேல் வந்த என் எதிர் வந்து - உயர்ந்த தேரின் மேல் வந்த என் எதிரே வந்து; நின் வலியால் நின்றாயொடு - உன்னுடைய ஆற்றல் ஒன்றையே கொண்டு எதிர் நிற்கின்ற உன்னோடு; இனி நின்றார் நிகரோ? உரை என்றான் - இப்போது உலகில் உள்ளவர்களில் ஒப்பாவார் உள்ளனரோ? சொல்! என்று கூறினான்.
“வீரனை வீரன் அறிவான்” எனும் மொழிப்படி, வீரனாகிய இராவணன் வீரனாகிய அனுமானை மனந்திறந்து பாராட்டி வியந்தவாறு. இந்த வெறுங்கையாளன் வீரத்தை முன்னமே கண்டுள்ளேன் என்பானாய், “நீ எனது உறவும் கொன்றாய்” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You are not one who has even a single weapon; alone, you
- killed my kinsmen; and now, coming against me, who came on a tall chariot
- bending my cruel, upcurved bow, with a mighty army,
- you stand by your own strength alone; is anyone who has stood your equal? Tell me, tall one.”
What the poem says
Irāvaṇaṉ goes on praising Aṉumaṉ. Without a single weapon, alone, Aṉumaṉ has already killed many of Irāvaṇaṉ's kin, earlier when he burned Ilaṅkai. Now he faces Irāvaṇaṉ, who comes with chariot, bow and army, armed only with his own strength. Who could match that?
As the saying goes, it takes a hero to know a hero.