கம்பராமாயணம் 7228 · யுத்த 14.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொருகைத்தலம் இருபத்து உள - போரிடுவதற்கு எனக்கு இருபது கரங்கள் உள்ளன; புகழும் பெரிது உளது - (உலகில் சிறந்த மாவீரன் என்னும்) புகழும் எனக்கு மிகுதியாய் உள்ளது; வருகைத்தல மதவெங்கரி - என் எதிரில் வந்த திசைகளில் உள்ள கொடிய மதயானைகள்; வலி கெட்டன - (என்னால்) கொம்புகள் முறிபட்டுப் போயின (இவையெல்லாம் அறிந்திருந்தும்); இருகைத்தலம் உடையாய்! - இரண்டு கைகளை மட்டும் உடையவனே! எதிர் வருவாய் - என் எதிரில் (துணிந்து) வருகின்றாய்; இவை சொற்றனை - இத்தகைய வீர உரைகளையும் ஆற்றுகின்றாய்; இனிமேல் தருகைக்கு உரியது ஓர் கொற்றம் என்? - (இதுவே பெரு வெற்றி ஆவதால்) இனிமேல் (நான் இனிப் போரிட்டு உனக்குத்) தரஉள்ள வெற்றி என என் உள்ளது? அமர் தக்கதும் அன்று - உன்னுடன் பொருவது தகுதியானதும் ஆகாது.
இருபது கையுடையோன் இருகையுடையோன் ஆகிய உன்னோடு பொருவது, ஒத்தாருடன் பொருவது எனும் போர் முறைக்கு உகந்தது ஆகாது என்பான், “அமர் தக்கதும் அன்று” என்றான். “யானை ஒருகையுடையது எறிவலோ யானும் இருகை சுமந்து வாழ்வேன்?” எனும் பழம் பாடல் இங்கு நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I have twenty hands for fighting; my fame too is great;
- the fierce rutting elephants with trunks that came against me lost their strength;
- you, who have two hands, come against me and speak these words;
- what victory is left to be won from here on? Nor is this a fitting fight.”
What the poem says
Irāvaṇaṉ says the challenge is already a victory for Aṉumaṉ. Irāvaṇaṉ has twenty arms, vast fame, and has broken the elephants of the quarters, yet Aṉumaṉ, with only two hands, dares to face him and talk like this. What more could fighting win him?
Irāvaṇaṉ adds that it would not even be a fair fight, since warriors should fight their equals, twenty hands against two.