கம்பராமாயணம் 7230 · யுத்த 14.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வினை கடியான் - கொடுந்தொழிலனான இராவணன்; அதனால் பூணித்து இவை உரை செய்தனை - (இவ்வாறு எனக்குப் பழிசேரும் காலம் ஆதலால்) சூள் உரைத்து (என்னிடம்) இத்தகு சொற்களை உரைத்தாய்; உரை பொதுவே - இவ்வாறு (ஒருவனுக்குப் பழி மிகுகையில்) பிறர் ஏளனம் புரிவது என்பது உலகின் இயல்புதான்; பாணித்தது - காலம் தாழ்ந்து விட்டது; பிறிது சில பகர்கின்றது என் - வேறு சில பேசிப்பயன் என்ன?; பழியால் நாணி - (நான்) வசையினால் வெட்கமுற்று; தலையிடுகின்றிலென் - தலை குனியவில்லை; நனி வந்து - மிக விரைந்து வந்து; உலகு எவையும் காண - உலகினர் யாவரும் காணுமாறு; கடிது எதிர் குத்துதி - விரைந்து (என்) எதிர் நின்று குத்துக; என்றான்.
பூணித்தல் - சூளுறவு செய்தல். இதனை வஞ்சினக் காஞ்சி என்பார் “என்னோடே பூணித்து” (ஈடு. 10.8.5) குரங்கோடு பொருவது பழி எனினும் சூளுரைத்து அழைப்பதால் மறுப்பது தோற்றுத்தலை குனிவதற்கு ஒப்பாகும் ஆகவே, “பழியால் நாணித்தலையிடுகின்றிலென்” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You have bound yourself by a vow and spoken these words; so be it, such talk is common;
- time is passing; why say anything more? I will not hang my head
- in shame for the disgrace; come right up, and with all the worlds
- watching, strike me hard, face to face,” said he of cruel deeds.
What the poem says
Irāvaṇaṉ accepts the challenge. Aṉumaṉ has made a formal vow, and people always mock a man when disgrace has come upon him. Enough talk; time is slipping by. Fighting a monkey may be beneath him, but refusing a sworn challenge would be the same as hanging his head in defeat. So he tells Aṉumaṉ to come and hit him as hard as he can, with all the worlds watching.