கம்பராமாயணம் 7232 · யுத்த 14.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுமால் வரை அயிர் உக்கன - (அனுமனது குத்தினால்) மிக உயர்ந்த பெரிய மணல் துகள் போல் உதிர்ந்தன; விழிகள் அனல் உக்கன - கண்களிலிருந்து தீப்பொறிகள் உதிர்ந்தன; முழு மூளைகள் தயிர் உக்கன - மூளைகள் முழுவதும் தயிர் போலக் (குழைந்து) சிந்தின; தலை தரியா உக்கன - (அரக்கரின்) தலைகள் (அதிர்ச்சியால் கழுத்தில்) தங்காமல் சிதைந்தன; நிருதக்குலம் உயிர் உக்கன - அரக்கர் இனத்தின் உயிர் வாழ்வும் சிதையத் தொடங்கின; உயர் வானரம் எவையும் - உயர்ந்த குரங்குகள் யாவும்; மயிர் உக்கன எயிறு உக்கன - உரோமக்கற்றைகளும் பற்களும் சிந்தின; வானம் மழை உக்கன - வானத்திலிருந்து மேகங்கள் சிதறி வீழ்ந்தன.
அனுமன் குத்து ஒன்றால், பலப்பல எதிர் விளைவுகள் நிகழ்ந்தன என்று குத்தின் வலிமையை உணர்த்தியவாறு. அசுரர் வானரர் இருபக்கமும் அதிர்ச்சியின் பாதிப்பு இருந்தது என்பதாம். சொற்பொருட் பின் வருநிலையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The tall great mountains crumbled into sand; the eyes spilled fire;
- whole brains spilled out like curd; heads fell, unable to hold;
- the demon race spilled out its lives; all the noble monkeys
- shed their hair and shed their teeth; the sky shed its clouds.
What the poem says
The shock of that one punch spreads everywhere. Mountains crumble to sand, eyes flash fire, brains spill like curd, demons' heads drop off and their lives drain away. Even the monkeys on Aṉumaṉ's own side lose hair and teeth, and the clouds fall from the sky. The verb “spilled” repeats through the verse.