கம்பராமாயணம் 7233 · யுத்த 14.175

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரிநீர்;
கல் சிந்தின, குல மால்வரை; கதிர் சிந்தின, சுடரும்;
பல் சிந்தின மதம் யானைகள்; படை சிந்தினர், எவரும்;
எல் சிந்தின எரி சிந்தின, இகலோன் மணி அகலம்.

பொருள் · Meaning in Tamil

வில் சிந்தின நெடுநாண் - (வீரர்களின்) வில்லிலிருந்து நீண்ட வில் நாண்கள் அறுந்து வீழ்ந்தன; விரிநீர் நிமிர் கரை சிந்தின - விரிந்த கடல் உயர்ந்த கரைகளை அழித்தன; குலமால் வரை கல் சிந்தின - சிறந்த பெருமலைகளிலிருந்து எல்லாம் (கட்டுக் குலைந்து) கற்கள் சிதைந்து வீழ்ந்தன; சுடரும் கதிர் சிந்தின - சூரிய சந்திரர்களான இரு சுடர்களும் தம் கிரணங்களைச் சிந்தின; மத யானைகள் பல் சிந்தின - மதங்கொண்ட யானைகள் தம் தந்தங்கள் சிந்தப்பெற்றன; எவரும் படை சிந்தினர் - அங்கிருந்தோர் யாவரும் தத்தம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டனர்; இகலோன் மணி அகலம் - வலியோனாகிய இராவணனது அழகிய மார்பு முழுதும்; எல் சிந்திய எரிசிந்தின - ஒளியுமிழ்ந்து கொண்டு நெருப்பைச் சிந்தின. சிந்தின என்ற சொல் பலமுறை வந்ததனால் சொற்பின் வருநிலையணி. ஓரிடத்தில் வீழ்ந்த விசையின் அதிர்வு அருகிருக்கும் இடத்தில் எல்லாம் அதிர்வை நிகழ்விப்பது இயல்பு. இங்கு தாங்குவானும் தாக்குவானும் மிகப் பேராற்றலர் ஆதலின், திசைகள், மலைகள், கடல்கள் எல்லாம் அதிர்வால் பாதிக்கப்பட்டன என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bows shed their long strings; the spreading sea shed its high shores;
  2. the great noble mountains shed their stones; the luminaries shed their rays;
  3. rutting elephants shed their tusks; everyone shed his weapons;
  4. and the jewelled chest of the mighty one shed fire that scattered light.

What the poem says

More of the punch's shock waves, this time built on the word “shed”. Bowstrings snap, the sea breaks over its shores, mountains drop their stones, sun and moon lose their rays, elephants lose their tusks, every soldier drops his weapons, and Irāvaṇaṉ's jewelled chest throws off sparks of fire.

The commentary explains that a blow traded between two such mighty beings sends tremors through everything around them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil cintiṉa neṭu nāṇ; nimir karai cintiṉa, viri nīr;
kal cintiṉa, kula māl varai; katir cintiṉa, cuṭarum;
pal cintiṉa mata yāṉaikaḷ; paṭai cintiṉar, evarum;
el cintiya eri cintiṉa, ikalōṉ maṇi akalam.