கம்பராமாயணம் 7234 · யுத்த 14.176

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கைக்குத்து அது படலும் - (அனுமனின்) கைக்குத்துப் பட்டவுடன்; கழல் நிருதர்க்கு இறை - வீர கண்டைகள் அணிந்த அரக்கர்களின் தலைவனாகிய இராவணனுடைய; கறைநீர் - (இரத்தக்கறை நீர்) படிந்த; மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் - அஞ்சனக் குவியலின் அழகைக் கொண்டு ஒளிர்கின்ற, வயிரத் தட மார்பில் - வயிரம் போன்று (திண்ணிய) அகன்ற மார்பில்; திக்கில் சினமத யானைகள் - எட்டுத் திக்குகளிலும் உள்ள மதங்கொண்ட யானைகளின்; வயவெம் பணை - வலிய கொடிய தந்தங்கள்; செருவில் புக்கு இற்றன - போரில் (தாக்கியபோது) முறிந்து போனவையாய்; போகாதன - (அந்த மார்பிலேயே) அகலாது நின்றவை; புகழின் புறம் உக்கன - அந்த இராவணனது புகழ் போல வெளியேறி வீழ்ந்தன.

இராவணன் மார்பில் இத்துணைக் காலம் புதைந்திருந்த எட்டுத்திக்கு யானைகளின் தந்தங்கள் முதுகின் வழியே வெளியேறின என்பதால் அனுமனது குத்தின் விசையை உணர்த்தியவாறு. இந்நிகழ்ச்சி பின்பு, (கம்ப. 9913-14) குறிக்கப் பெறுதல் காண்க. புகழ் வெண்ணிறமுடையது என்பது மரபாதலின் வெண்ணிறக் கொம்புகள் வெளியேறியதை, இராவணன் புகழ் வெளியேறியது போன்றிருந்தது எனப் பொருத்தமுற உவமித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the blow of the fist struck, from the broad diamond chest of the anklet-wearing demons' king,
  2. stained with blood, gleaming with the beauty of a heap of collyrium,
  3. the strong, cruel tusks of the furious rutting elephants of the quarters,
  4. which had entered in battle, broken off and never left, fell out the back, like his fame.

What the poem says

Long ago, when Irāvaṇaṉ fought the elephants that guard the eight directions, their tusks broke off in his chest and stayed buried there. Aṉumaṉ's punch is so violent that the tusks are driven right through him and drop out of his back.

Fame is white in Tamil convention, so the white tusks falling away are like Irāvaṇaṉ's fame leaving him. The episode is recalled later in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaik kuttuatu paṭalum kaḻal nirutarkku iṟai kaṟai nīr
maik kuppaiyiṉ eḻil koṇṭu oḷir vayirat taṭamārpil
tikkil ciṉa mata yāṉaikaḷ vaya vem paṇai ceruvil
pukku iṟṟaṉa, pōkātaṉa, puṟam ukkaṉa, pukaḻiṉ.