கம்பராமாயணம் 7235 · யுத்த 14.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அள் ஆடிய கவசத்து - சந்து விட்டுப் போன (தனது) கவசத்தில்; அவிர் மணி - ஒளிர்கின்ற மணிகள்; விள்ளா - விண்டு போய்; நெடு முழு மீன் என - நீண்ட முழுமையான நட்சத்திரங்கள் போன்று; திசை போய் அற்றன - திசைகளில் தெறித்து வீழ்ந்தன; அறம் வலித்தான் - (அப்போது) அறத்திற்குத் துன்பம் கொடுத்தவனான இராவணன்; விழி வெம் பொறி எழ நின்று - தன் விழிகளிலிருந்து தீப்பொறி எழுமாறு பார்த்து; உள் ஆடிய நெடுங்கால் பொர ஒடுங்கா - (உலகின்) உள்ளே எளிதாக உலாவிக் கொண்டிருக்கும் காற்று, பெருவலி பெற்று சண்ட மாருதமாகித் தாக்கியதனால் வலிகுன்றி; தள்ளாடிய வடமேருவின் சலித்தான் - தள்ளாடுகின்ற வடமேரு மலை போலத் தள்ளாடினான்.
அள்ளாடுதல் - கட்டுவிடுதல். சந்து பட்டுத் தளர்தல். “அள்ளாடிப் போனான்” வழக்குச் சொல். அனுமன் குத்தினால் மார்புக் கவசம் கட்டவிழ்ந்து மணிகள் சிந்துவது வானத்து மீன்கள் சிதறி வீழ்வது போன்றிருந்தது என்பதாம். நீலவானம் - இராவணன் கரிய மார்புக்கும், கவசத்தில் பதித்திருந்த மணிகள், வானத்திலிருந்த நட்சத்திரங்களுக்கும் உவமை
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gleaming gems of his loosened armour broke away and flew off to the quarters,
- falling like great whole stars that never come apart; fierce sparks rising, he stood
- and, as the mighty wind that moves within struck him and he could not hold firm,
- he who oppressed dharma reeled, like northern Mēru tottering, so the unshaken world shook.
What the poem says
The joints of Irāvaṇaṉ's armour spring apart, and its gems fly off in every direction like stars falling from his dark, sky-like chest. Irāvaṇaṉ, the oppressor of dharma, staggers like Mount Mēru shaken by a hurricane, and the world, which never moves, shakes with him.