கம்பராமாயணம் 7236 · யுத்த 14.178
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விசும்பு உறைவோர் - (அது கண்டு) வானத்தே வாழும் தேவர்கள்; ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தார்கள்; அனுமன் மிசை - அனுமானின் மீது; நறு முழு மென்மலர் அதிகம் நெடிது தூர்த்தார் - முழுதும் நறுமணமுள்ள மெல்லிய மலர்களை மிக நெடுநேரம் பொழிந்தார்கள்; இசை ஆசிகள் சொன்னார் - (அனுமன்) புகழ் (ஓங்கி) ஆசி மொழிகளைச் சொன்னார்கள்; நிருதர்கள் வேர்த்தார் - அரக்கர்கள் (அச்சத்தால் உடல்) வியர்த்தார்கள்; வானரர் வியந்தார் - குரங்குப் படையினர் (அனுமன் ஆற்றலைக் கண்டு) வியந்து போய் நின்றார்கள்; இவன் - இந்த இராவணனின்; விசயம் - வெற்றியை; தீர்த்தான் - ஒழித்தான்; என - என்று; உவந்து ஆடினர் - மகிழ்ச்சிக் கூத்தாடினர்; முழுமெய்ம் மயிர் சிலிர்த்தார் - உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தார்கள்.
மெய் சிலிர்த்தல் மகிழ்ச்சியாலும் வியப்பாலும் நிகழும் மெய்ப்பாடு. இசை ஆசி - இசைக்கு ஆசி. நான்கன் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who dwell in the sky cheered long; upon Aṉumaṉ
- they heaped fragrant, soft, full blossoms; they spoke blessings for his fame;
- the demons broke into a sweat; the monkeys marvelled, crying “He has ended
- this one's victories!”, and danced for joy, the hair on their whole bodies standing on end.
What the poem says
The gods cheer, shower Aṉumaṉ with flowers and bless him. The demons sweat with fear. The monkeys, astonished, dance about shouting that Aṉumaṉ has put an end to Irāvaṇaṉ's run of victories, and their hair stands on end, the sign of joy and wonder.