கம்பராமாயணம் 7237 · யுத்த 14.179

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அங்கியின் (நிலை) - அக்கினியின் நிலையினையும்; நெடு வாயுவின் நிலை - பெரிய உயிர்க்காற்றின் நிலையினையும், கற்றுக் கண்டவர் - (அநுபவக்) கல்வியால் உணர்ந்த யோகிகள்; கதியால் - அட்ட மாசித்தியால் ஆகும் பரகாயப் பிரவேசத்தால்; மற்று அங்கு ஒரு வடிவுற்று - பிறிதோர் உடலில் பொருந்தி; அது மாறாடுறுகாலை - எடுத்த உடம்புக்கேற்ற செயல் புரிய நேருகையில் உயிர் தான் முன்பெடுத்த உடம்பின் செயலுக்கு மாறான செயலைச் செய்ய இயலாமல் முரண்பாடு எழுந்தபோது; அங்கு - புது உடலில்; அருமையின் பற்று - அருமையின் உடற்பற்றின்றி; அன்னது பயில்கின்றதொர் செயலால் - அந்தப் பழைய உடலிலேயே பழக்கப்பட்ட செயல்களால் (அவற்றையே விரும்பி); அங்கு அது புறம்போய் உற்று - வெளிச்சென்ற உயிர் (மீண்டும்) வந்து; உடல் புகுந்தால் என - பழைய உடலிலேயே புகுந்தாற் போன்று; உணர்ந்தான் - இராவணன் (மயக்கத்தினின்று நீங்கி) உணர்ச்சி பெற்றான். அட்டமாசித்தி பெற்ற யோகிகள் பரகாயப் பிரவேசம் எனும் கூடுவிட்டுக் கூடு பாய்தலிலும் வல்லார் ஆவர். உயிர் அற்றவன் போல உணர்விழந்த இராவணன் மீண்டும் உணர்வு அடைந்ததனை, பரகாயம் செய்த யோகி ஒருவர் மீண்டும் பழைய உடலையே அடைந்ததற்கு உவமித்தார் அங்கி - மூலாக்கினி, குண்டலினியால் எழுவது. நெடுவாயு - இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நாடிகளிலும் சஞ்சரிக்கும் உயிர்க் (பிராண) காற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like one who has learned and mastered the inner fire and the long breath,
  2. who by that power has entered another body there, and when it goes against his nature,
  3. finding it hard to cling to, drawn by the habits of the old,
  4. goes back out and enters his own body again, he came to his senses.

What the poem says

Knocked senseless, Irāvaṇaṉ comes round. The poet compares him to a yogi who has mastered the inner fire and the life-breath and can leave his body to enter another. Finding the borrowed body does not suit him, the yogi returns, drawn by old habit, to his own body and wakes in it.

In the same way Irāvaṇaṉ's life, which seemed to have left him, comes back. The commentary explains the yogic terms: the root fire raised by kuṇḍalinī, and the vital breath moving through the three channels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟṟu aṅkiyiṉ neṭu vāyuviṉ nilai kaṇṭavar, katiyāl
maṟṟu aṅku oru vaṭivu uṟṟu, atu māṟāṭuṟu kālai
paṟṟu aṅku arumaiyiṉ, aṉṉatu payilkiṉṟatu or ceyalāl,
uṟṟu aṅku atu puṟam pōy, uṭal pukuntāl eṉa uṇarntāṉ.