கம்பராமாயணம் 7241 · யுத்த 14.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இகல் அடு மாருதி - பகைவர்களை அழிப்பதில் வல்ல அனுமன்; என்றான் எதிர் சென்றான் - என மேற்கண்டவாறு உரைத்த இராவணன் எதிரே போய், உன் உயிர் வீடாது - (நான் குத்திய குத்தினால்) உன் உயிரை விடாமல், உரை செய்தாய் - (என் எதிர் நின்று) உரையாடுகின்றாய்!; எனை நீ வென்றாய் அல்லையோ? - (ஆகவே) நீ என்னை வென்று விட்டவன் ஆகவில்லையோ?; நன்று - நல்லது; ஆக நின் நிலை நன்று - மிகவும் உன் நிலை நல்லது; என - என்று; நல்கா - (புகழ் உரை) நல்கி, எதிர் நடவா - அவன் எதிரே நடந்து சென்று; குன்று ஆகிய திரள் தோளவன் - மலைகளே தோள்கள் ஆயின எனுமாறு தோள்களையுடைய இராவணனுக்கு; கடன் கொள்க என - உன் கடனை ஏற்றுக் கொள்க என்று; கொடுத்தான் - தன் மார்பினைத் தந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So he spoke; and Māruti, slayer of foes, went up to him who spoke and said,
- “Have you not beaten me? Your life did not leave you, and you speak;
- well done, your state is good indeed,” and granting him that praise, he walked up to him,
- and to him of the massed, mountain-like shoulders gave his chest, saying “Take what you are owed.”
What the poem says
Aṉumaṉ returns the compliment. Irāvaṇaṉ took his punch and is still alive and talking, so in that sense he has won. Aṉumaṉ walks up and offers his chest: “Take what's owed you.”