கம்பராமாயணம் 7242 · யுத்த 14.184

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தனது நெடுவாய் பல மடித்து - இராவணன் தன்னுடைய பெரிய வாய்களை மடித்துக்கொண்டு; ஒளிர் பல் இறுக்கி - ஒளிர்கின்ற பற்களை இறுக்கியவாறு; கண்தொறும் எரி இழிய - விழிகள் தோறும் நெருப்புச் சிந்திக்கொண்டு; உறுக்கி - வெகுண்டு; பொதிநிமிர் பல்விரல் நெரிய முறுக்கி - கனம் மிக்க நீண்ட பலவான விரல்கள் ஒன்றாக இணையுமாறு முறுக்கிக்கொண்டு; திசை முரிய - திக்குகள் நிலை கெடுமாறு; கரம் நெடுந்தோள் புறம் குறுக்கி - கைகளை நீண்ட தோளிற்கு வெளியே மடக்கிக்கொண்டு; தனி எதிர் நின்றவன் உரத்தில் - தனித்தவனாய்த் தன் எதிர் நின்றவனான அனுமனுடைய மார்பின் மீது; நிரை கை கொடு குத்த - வரிசையான தன் கைகளை (ஒன்றாக்கிக்) கொண்டு குத்துகையில்.

குளகம் அடுத்த பாடலில் வரும் சலித்தான் எனும் வினையொடு முடியும். மற்போர் செய்பவர்களின் மெய்ப்பாடுகளை நுணுக்கமாகக் கவிஞர் பிரான் இப்பாடலில் உணர்த்தியுள்ளார் உறுக்குதல் - வெகுளல். அதட்டலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Snarling, on the chest of him who stood alone before him, clenching
  2. his gleaming teeth, biting the lips of his long cavernous mouths, fire streaming from each eye,
  3. twisting tight his many massive long fingers till they crushed together,
  4. drawing back his arm beyond his long shoulder so the quarters broke, he struck.

What the poem says

Irāvaṇaṉ gathers himself for his punch. He bites his lips and grinds his teeth, his eyes stream fire, he clenches his huge fingers into a fist, and he draws his arm far back behind his shoulder, a wind-up so violent the directions seem to crack, then strikes Aṉumaṉ in the chest.

The poet captures exactly a fighter's body as he lands a blow. The sentence is completed in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟukki, taṉi etir niṉṟavaṉ urattil, taṉatu oḷir pal
iṟukki, pila neṭu vāy maṭittu, eri kaṇtoṟum iḻiya,
muṟukkip poti nimir pala viral neriya, ticai muriyak
kuṟukkik karam, neṭun tōḷ puṟam nimirak, koṭu kutta.