கம்பராமாயணம் 7243 · யுத்த 14.185
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பள்ளக் கடல் கொள்ளப்படர்படி - ஆழம் நிறைந்த கடல் கொள்ளுமாறு பரந்துள்ள பூமி; பேரினும் - பெயர்ந்து நிலைகுலையும் காலத்தும்; பதையா வள்ளல் - நிலை குலையாத கருணை வள்ளலும்; பெருவெள்ளத்து - பெரிய வெள்ளத்தின் (வலிமையைப்) போல; எறுழ் வலியாரினும் வலியான் - வலிமை வாய்ந்த வலியவர் யாவரினும் வலியவனுமான அனுமன்; கள்ளக் கறை உள்ளத்து - கள்ளத்தனத்தால் அழுக்குடைய மனத்தையும்; அதிர் கழல் வெய்யவன் - ஒலிக்கின்ற வீரக் கழல்களையும் உடைய கொடியவனான இராவணன்; கரத்தால் தள்ள - கரத்தால் குத்திய போது; தளர் வெள்ளிப் பெருங்கிரியாம் எனச் சலித்தான் - தளர்ச்சியுற்ற வெள்ளிப் பெருமலையான கயிலையங்கிரி போலத் தள்ளாடினான்.
அனுமன் செயல்கள் யாவும் பயன் எதிர் பாராமல் செய்யப்பட்ட கொடைகள். ஆதலின் அவனை “வள்ளல்” என்றார் இராவணன் கயிலையைத் தூக்கியபோது அது தள்ளாடியது போல், அனுமன் தள்ளாடினான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The generous one, who would not tremble even if the earth spread wide
- were torn loose for the deep sea to swallow, stronger than the strongest of the great flood-like hosts,
- when the cruel one of the clanging anklets, with a heart stained by deceit, pushed him with his hand,
- reeled like the great silver mountain shaken.
What the poem says
Aṉumaṉ, who would not flinch if the whole earth were torn up and swallowed by the sea, and who is stronger than the strongest, staggers under the punch of the deceitful Irāvaṇaṉ. He sways the way the great silver mountain Kayilai swayed when Irāvaṇaṉ once tried to lift it.
Aṉumaṉ is called “the generous one” because everything he does is given freely, with no thought of reward.