கம்பராமாயணம் 7244 · யுத்த 14.186

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சலித்த காலையில், இமையவர் உலகொடும் சலித்தார்;
சலித்தால் அறம்; சலித்தது, மெய்ம்மொழி; தகவும்
சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த;
சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும்.

பொருள் · Meaning in Tamil

சலித்த காலையின் - (அனுமன் இராவணனுடைய குத்தினால்) தளர்வுற்ற போது; இமையவர் உலகு எலாம் சலித்த - தேவர்கள் உலகுகள் அனைத்தும் தளர்வெய்தின; அறம் சலித்தது - தருமம் தளர்வு அடைந்தது, மெய்ம்மொழி சலித்த - சத்திய வாசகங்களும் தளர்ந்தன; தகவும் சலித்தது - நற்பண்பும் தளர்ந்தது; அன்றியும் - இவையல்லாமல் மேலும்; புகழொடு சுருதியும் சலித்த - புகழோடு கூடிய வேதங்களும் தளர்வடைந்தன; நீதியும் சலித்த - (அற) நியதியும் சலித்தது; கருணையும் தவமும் சலித்த - அருளும் தவமும் தளர்வுற்றன.

தளர்வே அறியாத அனுமன் சலித்தான் என்ற உண்மையை வலியுறுத்துதற்கு தளர்வென்பதே அடைய முடியாதவை யெல்லாம் சலித்தன என்று கூறுகிறார் கவிச் சக்கரவர்த்தி. தம்மை வாழ்விப்பார் தளர்வுறின் அவரைச் சார்ந்திருப்பவை யனைத்தும், தளர்வுறுவது இயல்பு ஆதலின், அனுமன் தளர்வில், அவனோடு தொடர்புடைய அனைத்துப் பண்புகளும் பொருள்களும் தளர்ந்தன என்றவாறு. சொல்பொருள் பின்வருநிலையணி கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he reeled, all the worlds of the unblinking gods reeled;
  2. dharma reeled; true speech reeled; goodness
  3. reeled; and more than that, fame and the Vedas reeled;
  4. justice reeled; compassion and penance reeled.

What the poem says

When Aṉumaṉ, who has never known weakness, staggers, everything that leans on him staggers too: the worlds of the gods, dharma, truth, goodness, fame, the Vedas, justice, compassion and spiritual discipline.

The verse repeats the single verb “reeled” to show how much rests on Aṉumaṉ as a champion of virtue.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1calitta kālaiyiṉ, imaiyavar ulaku elām calitta;
calittatāl aṟam; calittatu, meym moḻi; takavum
calittatu; aṉṟiyum, pukaḻoṭu curutiyum calitta;
calitta nītiyum; calittaṉa karuṇaiyum tavamum.