கம்பராமாயணம் 7245 · யுத்த 14.187

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனைய காலையின் - (அனுமன் இவ்வாறு தளர்ந்த) அப்போது; அவ்வழியோர் - அங்கு இருந்தவர்களான; அரிக்குலத்தோர் - வானர இனத்தலைவர்கள்; எனையர் அன்னவர் யாவரும் - எத்தகையோர் ஆயினும் அவர்கள் எல்லோரும்; வினை இது என்று அறிந்து - (தாம்) செய்யத்தக்க செயல் இதுவே என்று தெளிந்து; ஒரு குவடு ஏந்தி - ஆளுக்கு ஒரு மலையினை ஏந்தி; நினைவின் முன் - (இராவணன்) நினைப்பதற்கு முன்னே; நெடு விசும்பு ஒரு வெளியின்றி நெருங்க - பரந்த வானத்தில் (சிறிதும்) வெற்றிடமில்லாமல் நெருக்கம் ஆகுமாறு; இராவணன் மேல் செலவிட்டார் - (அந்த மலைகளை) இராவணன் மேல் செல்லுமாறு வீசினார்கள்.

இராவணனை முடித்து விடவேண்டும் என ஆளுக்கொரு மலையைப் பிடுங்கி எறிந்த வானரர் செயல் அனுமன் மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் மிகுதியைப் புலப்படுத்தியவாறு. மேலே நிமிர்ந்து பார்த்தால், வானத்தைப் பார்க்க முடியவில்லை; மலைகளைத்தான் பார்க்க முடிந்தது என்பார். “நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the leaders of the monkey tribe who were there,
  2. all of them, whoever they were, each lifting a peak,
  3. quicker than thought, so that the vast sky was packed with no gap left,
  4. knowing this was the thing to do, let them fly at Irāvaṇaṉ.

What the poem says

Seeing Aṉumaṉ stagger, every monkey chief nearby grabs a mountain peak and, faster than Irāvaṇaṉ can think, hurls it at him. So many are in the air that the sky is packed solid; look up and you see mountains, not sky.

The instant, shared attack shows how much the monkeys love Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya kālaiyiṉ, arik kulat talaivar av vaḻiyōr
eṉaiyar aṉṉavar yāvarum, oru kuvaṭu ēnti,
niṉaiviṉ muṉ neṭu vicumpu oru veḷi iṉṟi neruṅka,
viṉai itu eṉṟu aṟintu irāvaṇaṉmēl cela viṭṭār.