கம்பராமாயணம் 7246 · யுத்த 14.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒத்த கையினர் - ஒருநிகராய் (ஓங்கிய) கைகளை உடையோராய், ஊழியின் இறுதியின் - யுகமுடிவுக்காலத்தில், உலகை மெத்த மீது எழு - உலகத்தை மூடி மேலே எழுகின்ற, மேகத்தின் - மேகத்தினைப் போல; விசும்பு எலாம் மிடைய - வானம் எல்லாம் நிரம்ப; பத்து நூறு கோடிக்குமேல் - ஆயிரம் கோடி எண்ணிக்கைக்கும் அதிகமான; பனிபடு சிகரம் - பனி தோய்ந்த சிகரங்களை; எத்திமேல் செல - தாக்கி (இராவணன்) மேலே பாயுமாறு; எறிந்தனர் - வீசினர்; இமையோர் பிறிந்தனர் - தேவர்கள் (அச்சத்தால்) அப்பால் கலைந்து போயினர்
எல்லோருடைய கைகளும் மலையை ஏந்துதல் என்னும் ஒரு செயலைச் செய்து நின்றமையின், “ஒத்த கையினர்” என்றார். ஊழிக்காலத்தில் மேகங்கள் அடுக்கு அடுக்காக மூடி மழையாகக் கொட்டி உலகையழிக்குமாதலின், “உலகை மெத்த மீதெழு மேகத்தின் விசும்பெலாம் மிடைய” என்றார். எறிந்தவை என்ற இணை எதுகை நோக்கி, பிரிந்தனர் என்ற பாலது பிறிந்தனர் என வந்தது. வீசிய மலைகள் விசும்பில் பாய்தலால் தம்மையும் தாக்கி விடுமோ என்று தேவர்கள் இடம் பெயர்ந்தனர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With hands raised as one, like the clouds that rise and blanket
- the world at the end of the age, so that the whole sky was crammed,
- they hurled more than a thousand crores of snow-capped peaks
- to strike and fly upon him; and the gods scattered away.
What the poem says
All the monkeys' arms move together, and they fling more than a thousand crores of snow-capped peaks at Irāvaṇaṉ. The sky fills the way storm clouds pile up at the end of an age to drown the world. The gods watching overhead scatter, afraid the mountains will hit them too.