கம்பராமாயணம் 7248 · யுத்த 14.190
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கற்கள் ஒன்றின் ஒன்றுபட்டு உடைவன - (வானர வீரர் வீசிய) மலைகள் ஒன்றோடு ஒன்று பட்டு உடைவன ஆகி, இடித்து உரும் அதிர - ஒலியெழுப்பி இடி போல் அதிரவும்; சென்றவன் பொறிமின் பல செறிந்திட - தாக்குகையில் பிதிர்ந்த வலிய நெருப்புப் பொறிகள், மின்னல்கள் போல விண்ணில் நெருங்கவும்; தெய்வவென்றி வில் என விழுநிழல் விரிந்திட - அம்மலைகளிலிருந்து வீழ்ந்திடும் பல்நிற ஒளியின் சாயைகள், வெற்றிக்குரிய இந்திர வில் போல விரியவும்; மேன்மேல் கன்றி ஓடிட - மேலும் மேலும் தாக்கி ஓடுவதால்; கல்மழை நிகர்த்தன - (வீழும் கல்துகள்களால்) கல்மழை பொழிகின்ற மேகம் போன்றன. ஏது உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Breaking as they struck one another, crashing so the thunder roared,
- with fierce flying sparks packed thick like lightning flashes,
- with the light falling from them spreading like the god's victorious bow,
- jostling harder and harder as they ran, the rocks were like a hailstorm of stone.
What the poem says
The mountains crash into one another in the crowded sky, booming like thunder. The sparks they throw off flash like lightning, the many-coloured light glancing off them spreads like a rainbow, Intiraṉ's bow, and the shattered fragments pour down. The whole scene is like a storm raining stones.