கம்பராமாயணம் 7249 · யுத்த 14.191

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இரிந்து நீங்கினது இராக்கதப் பெரும்படை; எங்கும்
விரிந்து சிந்தின, வானத்து மீனோடு விமானம்;
சொரிந்த வெம்பொறி பட, கடல் சுவறின; தோற்றம்
கரிந்த கண்டகர் கண்மணி; என் பல கழறி?

பொருள் · Meaning in Tamil

(வானரர் வீசிய மலைகளால்) இராக்கதப் பெரும்படை இரிந்து நீங்கியது - அரக்கர்களின் பெரும் படையானது அஞ்சி ஓடியது; வானத்து மீனொடு விமானம் - வானவெளியில் உள்ள மீன்களோடு விமானங்களும்; விரிந்து சிதறின - (மலைகளின் தாக்குதலால்) பலவேறாகச் சிதைந்து சிதறின; சொரிந்த வெம்பொறிபட - மலைகளின் மோதலால் வீழ்ந்த வெப்பம் மிக்க தீப்பொறிகளால்; கடல் சுவறின - கடல்கள் வற்றின; பல கழறி என்? - பலப்பல சொல்லிப் பயன் என்ன?; கண்டகர் கண்மணி தோற்றம் கரிந்த - அரக்கரின் கண்கள் (ஒளிமிகுதியால்) கரிந்து கண்மணிகள் காணும் தோற்றத்தை இழந்து போயின.

வானர வீரர்கள் வீசிய மலைகளால் ஏற்பட்ட அழிவுகள் அடுக்கப்பட்டுள்ளன. கண்டகர் - முள்ளைப் போலத் துன்பஞ்செய்பவர். குரங்குகள் மலைகளால் போர் செய்தமையைச் செயங்கொண்டாரும் தம் பரணியில் குறிப்பார்: “அணிகொண்ட குரங்கினங்கள் அலை கடலுக்கு அப்பாலை, மணல் ஒன்று காணாமல் மலையெடுத்து மயங்கினவே.” (கலிங். பர. பாலை பாடியது. 96)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great demon army broke and fled; everywhere
  2. the stars of the sky and the aerial cars burst apart and scattered;
  3. as the fierce sparks fell, the seas dried up; why say more?
  4. The eyeballs of the thorn-like demons were scorched and lost their sight.

What the poem says

The damage done by the monkeys' mountains is listed. The demon army flees. Stars and the gods' flying chariots are knocked out of the sky. Falling sparks boil the seas dry. The demons, a thorn in the world's side, are blinded by the glare.

The commentary cites the Kaliṅkattupparaṇi, which also remembers the monkeys fighting with mountains in Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irintu nīṅkiyatu irākkatap perum paṭai; eṅkum
virintu cintiṉa, vāṉattu mīṉōṭu vimāṉam;
corinta vem poṟi paṭa, kaṭal cuvaṟiṉa; tōṟṟam
karinta kaṇṭakar kaṇ maṇi; eṉ pala kaḻaṟi?