கம்பராமாயணம் 7250 · யுத்த 14.192

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்;
ஒறுத்து வானவர் புகழ்கொண்ட பாரவில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடிமேல் அம்பால்.

பொருள் · Meaning in Tamil

இன்று உலகம் இறுத்தது - இன்றைக்கு உலகம் அழிந்தது, என்பதோர் திமிலம் வந்து எய்த - என்கின்ற பெரிய ஒலி எங்கும் எழ; கறுத்த சிந்தையன் - சினமுற்ற மனங்கொண்ட இராவணன்; அனையது கண்டான் - தன்னை நோக்கிப் பல மலைகள் வருவதைத் தான் பார்த்தான்; (பார்த்தவுடன்) ஒறுத்து வானவர் புகழ் உண்ட - தண்டித்து, தேவர் புகழினையும் அழித்த; பாரவில் உளைய - பெருமை சான்ற தன் வில் வளைந்து நெகிழ (அவ்வில்லிலிருந்து வெளிப்பட்ட); ஆயிரம் கோடி மேல் அம்பால் - மிகப் பல அம்புகளால்; அறுத்து நீக்கினன் - அம்மலைகளைத் தகர்த்து ஒழித்தான்.

திமிலம் - பேரொலி. துமிலம் எனவும் வழங்குக. ‘திமில நான்மறை சேர் திருப்பெருந்துறை’ (திருவாச. 26:4)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a roar arose, “Today the world has ended!”,
  2. Irāvaṇaṉ of the darkened mind saw it;
  3. bending till it groaned the heavy bow that had punished the gods and devoured their fame,
  4. with more than a thousand crores of arrows he cut them apart and swept them away.

What the poem says

A cry goes up that the world is ending. Irāvaṇaṉ, black with rage, watches the mountains coming. He bends his mighty bow, the bow that once humbled the gods and ate up their fame, until it groans, and with more than a thousand crores of arrows he shatters the mountains and clears the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟuttatu iṉṟu ulaku eṉpatu ōr timilam vantu eyta
kaṟutta cintaiyaṉ irāvaṇaṉ aṉaiyatu kaṇṭāṉ;
oṟuttu vāṉavar pukaḻuṇṭa pāra vil uḷaiya
aṟuttu nīkkiṉaṉ āyira kōṭi mēl ampāl.