கம்பராமாயணம் 7251 · யுத்த 14.193

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காம்பு எலாம் கடுந்துகள் பட, களிறு எலாம் துணிய,
பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,
கூம்பல் மாமரம் எரிந்து உக, குறுந்துகள் நெறுங்க,
சாம்பல் ஆயின, தடவரை சுடுகணை தடிய.

பொருள் · Meaning in Tamil

சுடுகணை தடிய - (இராவணன் விட்ட) கொடிய அம்புகள் துணித்ததனால், காம்பு எலாம் கடும் துகள் பட - (தம்மிடம் உள்ள) மூங்கில்கள் எல்லாம் துண்டு துண்டாக; களிறு எலாம் துணிய - யானைகள் எல்லாம் துண்டுபட; பாம்பு எலாம் பட - பாம்புகள் எல்லாம் மடிந்தொழிய; யாளியும் உழுவையும் பாற - ஆளியும் புலிகளும் அழிய; கூம்பல் மாமரம் எரிந்து உக - குவிந்து திரள்படத் தோன்றிய பெரிய மரங்கள் எல்லாம் அழிந்தொழிய; குறுந்துகள் நுறுங்க - சிறு துண்டுகள் மேலும் துகளாக; தடவரை சாம்பர் ஆயின - வானரங்களின் பெரிய மலைகள் யாவும் சாம்பல் ஆகிப் போயின. இராவணன் அம்புகளால், மலைகளில் உள்ள பொருள்கள் எல்லாம் அழிந்து, மலைகளும் தூளாயின என்றார். சுடு கணை தடிய...தடவரை சாம்பர் ஆயின எனக் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the bamboos shattered to harsh dust, all the elephants were cut apart,
  2. all the snakes perished, the yāḷis and tigers were destroyed,
  3. the great clustered trees burned and fell, the small fragments were ground finer,
  4. and the broad mountains became ash, as the burning arrows hacked them.

What the poem says

Irāvaṇaṉ's burning arrows destroy the mountains and everything living on them: bamboo groves, elephants, snakes, yāḷis and tigers, and great stands of trees. The fragments are ground smaller and smaller until the mountains are nothing but ash.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāmpu elām kaṭun tukaḷ paṭa, kaḷiṟu elām tuṇiya,
pāmpu elām paṭa, yāḷiyum uḻuvaiyum pāṟa,
kūmpal mā maram erintu uka, kuṟun tukaḷ neṟuṅka,
cāmpar āyiṉa, taṭa varai cuṭu kaṇai taṭiya.