கம்பராமாயணம் 7253 · யுத்த 14.195

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அடல் துடைத்தும் ‘என்று அரிக்குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன, தசமுகன் கரம்; அவை திசை சூழ்
கடல் துடைத்தன; களத்தின் நின்று உயர்தரு பூமி
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது, ஒண்புடவி.

பொருள் · Meaning in Tamil

அடல் துடைத்தும் என்று - (இராவணனுடைய) வல்லமையை அழித்து விடுவோம் என்று கூறி; அரிக்குல வீரர் அன்று எறிந்த திடல் - வானர குல வீரர்கள் அன்று அஞ்சி வீசிய மலைகளை; தசமுகன் சரம் அவை துடைத்தன - இராவணன் அம்புகள் அழித்தொழித்து விட்டன; அவை திசை சூழ்கடல் துடைத்தன - அந்த மலைகளின் துகள்கள் திக்குகளில் சூழ்ந்துள்ள கடல்களைத் தூர்த்தன; களத்தின் நின்று உயர்தரும் பூழி - (அக்காலத்தே) போர்க்களத்தினின்றும் எழுந்த புழுதிகள்; உடல் உதிரமும் துடைத்தன - (படைவீரர்களின்) உடலிலிருந்த வியர்வை, குருதி எல்லாம் துடைத்தன; ஒண் புடவி துடைத்தது - பூமியையும் அப்புழுதி வெள்ளம் துடைத்தது.

துடைத்தல் என்னும் வினை பன்முறை ஒரே பொருளில் வருதலால், சொற்பின் வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hills the monkey heroes hurled that day, saying “We will wipe out his might,”
  2. were wiped out by the Ten-faced one's arrows; they in turn wiped out
  3. the seas that ring the quarters; the dust rising from the field
  4. wiped off the bodies, wiped off the blood too, and wiped the bright earth.

What the poem says

A verse built on the verb “wiped”. The monkeys threw their mountains meaning to wipe out Irāvaṇaṉ's strength, but his arrows wiped out the mountains. Their dust filled the encircling seas, and the dust that rose from the battlefield wiped away sweat and blood from the warriors' bodies and covered the whole earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṭal tuṭaittum ‘eṉṟu arik kula vīrar aṉṟu eṟinta
tiṭaltuṭaittaṉa, tacamukaṉ caram; avai ticai cūḻ
kaṭaltuṭaittaṉa; kaḷattiṉniṉṟu uyartarum pūḻi
uṭaltuṭaittaṉa utiramum tuṭaittatu, oṇ puṭavi.