கம்பராமாயணம் 7255 · யுத்த 14.197

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐ இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி
கைகள் ஈர் ஐந்தினாலும், வெங்கடுப்பினில் தொடுப்புற்று
எய்ய, எஞ்சின, வானமும், இருநில வரைப்பும்,
மொய் கொள் வேலையும், திசைகளும், சரங்களாய் முடிந்த.

பொருள் · Meaning in Tamil

அய் இரண்டு கார் முகத்தினும் - பத்து விற்களிலும், ஆயிரம் பகழி - ஆயிரம் அம்புகளை; கைகள் ஈர் ஐந்தினாலும் - பத்துக் கரங்களினாலும்; கடுப்பினில் தொடுத்துற்று எய்ய - கடிய வேகத்துடன் தொடுத்து எய்ததனால்; எஞ்சின வானமும் - பூதங்கள் யாவற்றையும் கடந்து நிற்கும் வானமும்; இருநில வரைப்பும் - பெரிய பூமிப் பரப்பும்; மொய்கொள் வேலையும் - வலிமை கொண்ட கடலும்; திசைகளும் - திக்குகளும்; சரங்களாய் முடிந்த - அம்புகளாகவே ஆயின.

அய் இரண்டு - ஐயிரண்டு (பத்து) கய் இரண்டு - கை இரண்டு. எதுகை நோக்கி அய், கய் என வந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As with his hands, twice five, he fitted with fierce speed
  2. and shot a thousand arrows from each of the twice five bows,
  3. the sky that outlasts all, the wide stretch of earth,
  4. the teeming sea and the quarters were all turned into arrows.

What the poem says

From each of his ten bows, with his ten drawing hands, Irāvaṇaṉ shoots a thousand arrows at furious speed, until sky, earth, sea and every direction seem to be made of nothing but arrows.

The Tamil spells “twice five” and “hands” in unusual forms to keep the rhyme of the line openings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ai iraṇṭu kārmukattiṉum āyiram pakaḻi
kaykaḷ īr aintiṉālum, veṅ kaṭuppiṉil toṭuttuṟṟu
eyya, eñci, vāṉamum, iru nila varaippum,
moy koḷ vēlaiyum, ticaikaḷum, caraṅkaḷāy muṭinta.