கம்பராமாயணம் 7256 · யுத்த 14.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உதிரம் சிந்தி - இரத்தம் சிந்தியதனால், அவ்அமர்க்களம் அந்தி வானகம் ஒத்தது - அந்தப் போர்க்களம் மாலைச் செவ்வானத்திற்கு ஒப்பானது; வேலையும் திசைகளும் நிறைந்தன - கடலும் திக்குகளும் நிரம்பின; சரத்தால் - (இராவணன் விட்ட) அம்புகளால்; வானரப்பகுதி - குரங்குக் கூட்டம்; பந்தி பந்தியாய் மடிந்தது - வரிசை வரிசையாய் (வந்து) மாண்டது; பிணப் பெருமலை மேல் - (அப்படி மடிந்த) குரங்குகளின் பிணக்குவியலாகிய மலையின் மேல்; வந்து மேகங்கள் படிந்தன - மேகங்கள் வந்து தங்கியிருந்தன.
“உதிரம் சிந்தி” என்பது இடைநிலைத் தீபமாய் இருமருங்கும் இணைந்தது. “மழைபெய்து குளம் நிறைந்தது” என்பது போல, “சிந்தி” என்னும் செய்தென் எச்சம் காரணம் பொருளில் வந்தது. பிண மலை உயர்ந்தமையால் மேகங்கள் வந்து தங்கின என்றது உயர்வு நவிற்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With blood spilled, that battlefield was like the evening sky;
- the sea and the quarters were filled with arrows;
- the monkey host died row upon row;
- and the clouds came down and settled on the great mountains of corpses.
What the poem says
Irāvaṇaṉ's arrows bring down the monkeys rank after rank. The field, soaked with blood, glows red like the sky at sunset, and the bodies pile so high that clouds come down and rest on them as if on mountain peaks, a deliberate exaggeration.