கம்பராமாயணம் 7258 · யுத்த 14.200

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்றும் வீரர் - மற்றைய வீரர்கள்; தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப - தத்தம் உயிர் நிலைகளில் கூர்மையான அம்புகள் தைத்ததனால்; கொற்ற வீரமும் - (தங்கள் பழைய) வெற்றிக்குரிய வீரத்தையும்; ஆண்தொழில் செய்கையும் குறைந்தார் - ஆண்மைச் செயலுக்கேற்ற பெருமையினையும் இழந்தார்கள்; சுற்றும் வானரப் பெரும் கடல் தொலைந்தது - சூழ்ந்து நின்ற குரங்குப் படைக்கடலானது அழிந்தது; தொலையாது உற்று நின்றவர் ஓடினர் - (வானரரில்) இறவாது உயிருடன் நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர்; இலக்குவன் உருத்தான் - (இந்நிலை கண்ட) இலக்குவன் வெகுண்டெழுந்தான்.

மருமம் - மார்பு. “மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்” (கம்ப. 325) “மானத்தால் ஊன்றப்பட்ட மருமத்தான்” (கம்ப. 6940) எனுமிடங்களில் மருமம், மார்பு எனும் பொருளில் வருவது காண்க. அயில் - கூர்மை. மடுத்தல் - படுதல். தொழில் செய்கை - ஒரு பொருட்பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As sharp arrows drove into the chests of the other heroes too,
  2. they lost their victorious valour and their manly deeds;
  3. the great sea of monkeys all around was destroyed; those who stood
  4. and were not destroyed ran; and Ilakkuvaṉ blazed with anger.

What the poem says

The other monkey heroes, hit in the chest by sharp arrows, lose their strength and courage. The great sea of the monkey army is wiped out, and the survivors run. Seeing this, Ilakkuvaṉ flares up in fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟum vīrartam marumattiṉ ayil ampu maṭuppa,
koṟṟa vīramum āṇtoḻil ceykaiyum kuṟaintār;
cuṟṟum vāṉarap peruṅ kaṭal tolaintatu; tolaiyātu
uṟṟu niṉṟavar ōṭiṉar; ilakkuvaṉ uruttāṉ.