கம்பராமாயணம் 726 · பால 11.17

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ் உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய்,
'இவ் உலகம் அன்றி, ஈர் ஏழ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளம் குரிசிலரை தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக' என்றான்.

பொருள் · Meaning in Tamil

அவ்வுரை கேட்டு - (தசரதன் கூறிய) அந்த வார்த்தையைக் கேட்டு; அம் முனியும் - அந்த ருசிய சிருங்க முனிவனும்; அருள் சுரந்த - கருணை பொழிந்த; உவகையனாய் - மகிழ்ச்சியுடையவனாகி; (அவ்வரசனை நோக்கி); இவ்வுலகம் அன்றியே - இந்த நிலவுலகம் ஒன்றை மாத்திரம் அல்லாமல்; எவ் உலகும் - எல்லா உலகங்களையும்; இனிது அளிக்கும் - இனிதாக (எளிதில்) காத்திடும் படியான; செவ்வி இளஞ்சிறுவர்களை - அழகிய இளைய மைந்தர்களை; தருகின்றேன் - (உனக்கு நான் இப்பொழுது) கொடுத்திடுவேன்; இனி - இனிமேல்; தேவர் வவ்வி நுகர் - தேவர்கள் (அவிசுகளைப்) பெற்று உண்ணக் கூடிய; பெருவேள்விக்கு - பெரிய யாகத்தைச் செய்வதற்கு; உரிய எலாம் - வேண்டிய பொருள்கள் யாவும்; வருக என்றான் - (இங்கு) வந்து சேரட்டும் என்று சொன்னான்.

தருகின்றேன் - விரைவும் தெளிவும் குறித்து எதிர்காலம் நிகழ்காலமாக மயங்கிற்று. 'எவ்வுலகும் இனிது அளிக்கும்' - காத்தல் தொழிலுக்கு உரிய திருமாலின் அம்சமானவர் என்பது அறியப்பெறுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing those words, that sage too, glad and overflowing with grace, said,
  2. 'Not this world alone — I am giving you fine young sons
  3. who will sweetly protect every world; now let everything
  4. needed for the great sacrifice the gods seize and enjoy be brought.'

What the poem says

The sage, moved to compassion, promises Tacarataṉ sons who will protect not just this world but all worlds — a hint that they will be portions of Viṣṇu, the preserver. He orders everything needed for a great sacrifice, whose offerings the gods will receive.

The present tense "I am giving" expresses the certainty and swiftness of the promise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av urai kēṭṭu am muṉiyum aruḷ curanta uvakaiyaṉ āy,
'iv ulakam aṉṟiyē ev ulakum iṉitu aḷikkum
cevvi iḷañ ciṟuvarkaḷait tarukiṉṟēṉ; iṉit tēvar
vavvi nukar peru vēḷvikku uriya elām varuka' eṉṟāṉ.