கம்பராமாயணம் 7261 · யுத்த 14.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போர்வலி நன்று - உனது போர் ஆற்றல் நன்று; போர் ஆள்வலி வீரம் நன்று - போரிடுங்கால் நீ போரைக் கை யாள்கின்ற வீரச்செயல் திறனும் நன்று; நோக்கமும் நன்று - நீ நோக்கும் வீரமிகு பார்வையும் நன்று; கைக் கடுமையும் நன்று - விசையும் நன்று; கல்வியும் நன்று - நீ கற்றுள்ள போர்க்கலக கல்வித்திறமும் நன்று; நின் திண்மையும் நலனும் நன்று - உனது மன உறுதியும், நீ போர் புரியும் அழகும் நன்று; என்று இராவணன் - என்று இராவணன் கூறி; கைமறித்து - (வியப்பால்) கைகளை மறித்தவாறு; நீ ஒருவன் - நீ ஒப்பற்ற வீரன்; என்றான் - என்று இலக்குவன் வீரத்தை வியந்து (மனந்திறந்து) போற்றினான்.
பகைவன் தன்னொடு போரிடுங்கால், என்னென்ன தனிச்சிறப்புகளுடன் போரிடுகின்றான் என்பதனை உன்னிப்பாகக் கவனித்துக் கணித்து அறியும் இயல்பினன் இராவணன் என்பதனை இப்பாடலால் உணர்க. “வீரரை யார் வியவாதார்?” (கம்ப.4009) என்பதற்கேற்ப, இராமன் வீரத்தையும் இராவணன் வியந்து போற்றுவதைக் கும்பகருணன் வதைப்படலத்துள்ளும் (75-31) காணல் ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Good, your strength in war; good, the strength with which you wield war; your valour
- is good; your aim is good; the fierceness of your hand is good;
- your learning is good; good, your firmness and your grace,”
- said Irāvaṇaṉ, waving his hands, and “You are one alone.”
What the poem says
Irāvaṇaṉ, waving his hands in astonishment, praises Ilakkuvaṉ point by point: his strength, his command of the fight, his courage, his aim, his speed of hand, his training, his steadiness and his grace. “You are unique,” he says.
The verse shows that Irāvaṇaṉ studies each enemy's strengths as he fights, and he later praises Irāmaṉ's valour the same way.