கம்பராமாயணம் 7263 · யுத்த 14.205

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘
‘

பொருள் · Meaning in Tamil

இவன் - இந்த இலக்குவன்; வில்லினால் வெலப்படான் - வில்லால் வெல்லப்பட இயலாதவன்; எனச் சினம் வீங்க - எனக் கருதியதால் கோபம் பெருக; கொல்லும் நாளும் இன்று - (இவனைக்) கொன்று தீர வேண்டிய நாளும் இன்றேயாம்; இது என - (அதற்கு ஏற்ற நேரமும்) இதுவே என்று; சிந்தையில் கொண்டான் - தன் மனத்தில் கருதியவனாய்; பல்லினால் இதழ் அதுக்கினான் - பற்களால் உதடுகளைக் கடித்தவனாய்; வலிப்பரு கரத்தால் - வலிய பெரிய கரத்தால்; எல்லின் - ஒளியொடு கூடிய; நான்முகன் கொடுத்தது - பிரம்மா கொடுத்ததாகிய; ஓர் வேல் எடுத்து எறிந்தான் - ஒப்பற்ற வேல் ஒன்றை எடுத்து இலக்குவன் மீது (இராவணன்) வீசினான். வில் ஆற்றலில் தன்னிலும் உயர்ந்தவன் இலக்குவன் எனத் துணிந்த இராவணன் பிரம்மன் கொடுத்த வேலினால் இன்றே இப்போதே முடிப்பேன் எனக் கருதி, இலக்குவன் மீது அவ்வேலைப் பாய்ச்சினன் என்க. இது என்பதற்கு ஏற்ற நேரமும் இது எனக் கொள்ளாமல் ஏற்ற கருவியும் இது எனக் கொண்டான் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his anger swelling at the thought “This one cannot be beaten with the bow,”
  2. he resolved in his mind, “Today is the day to kill him, and this is the moment”;
  3. he bit his lip with his teeth, and with his massive, mighty hand
  4. he took up a radiant spear the Four-faced One had given him and hurled it.

What the poem says

Irāvaṇaṉ realises he cannot beat Ilakkuvaṉ with the bow. Furious, biting his lip, he decides that Ilakkuvaṉ must die today, now, and hurls a blazing spear that Piramaṉ, the four-faced Creator, once gave him.

The commentary allows that “this” may refer either to the right moment or to the right weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘villiṉāl ivaṉ velappaṭāṉ ‘ eṉac ciṉam vīṅka,
‘kollum nāḷum iṉṟu itu ‘ eṉac cintaiyil koṇṭāṉ,
palliṉāl itaḻ atukkiṉaṉ; paru valik karattāl
elliṉ nāṉmukaṉ koṭuttatu ōr vēl eṭuttu eṟintāṉ.