கம்பராமாயணம் 7264 · யுத்த 14.206
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எறிந்த காலவேல் - (இராவணன் வீசிய) காலனைப் போன்ற (கொடிய) வேலானது; எய்த அம்பு யாவையும் எரித்து - (இலக்குவன்) எய்த அம்புகள் யாவற்றையும் தீய்த்து; பொறிந்து போய் உக - தீப்பொறியாகிப் போய்ச் சிந்தி விழுமாறும்; தீ உக - நெருப்புச் சிந்துமாறும்; விசையினில் பொங்கி - வேகமுடன் எழுந்து; செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது - மலர்கள் அடர்ந்த மாலையினை ஏந்திய இலக்குவனின் மார்பின் நடுவே (பாய்ந்து) சென்றது; சிந்தை அறிந்த மைந்தனும் - (அவ்வாறு வேல் சென்றதை) உணர்ந்த இலக்குவனும்; நெடு அமர்க்களத்திடை அயர்ந்தான் - பரந்தகன்ற போர்க்களத்தில் சோர்வுற்று வீழ்ந்தான்.
பொறிந்து போய் உக, தீயுக என்பதனை, பொறிந்துபோய், யுகத்தீயுக எனக் கொண்டு யுகம் ஈந்த காலத்தீ போல் விழ எனக் கொள்ளினுமாம். நெஞ்சில் பாய்ந்தவுடன் வேலின் உக்கிரத்தை இலக்குவன் அறிந்தான் ஆதலின், “சிந்தை அறிந்த மைந்தனும்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The deadly spear he hurled burned up all the arrows shot at it,
- so that they crackled away in sparks and fire spilled, and surging with speed
- it went into the chest of him of the thick garland; and the young hero,
- knowing it in his mind, swooned on the long field of battle.
What the poem says
The spear, deadly as Death, burns up every arrow Ilakkuvaṉ shoots to stop it, scattering them as sparks and fire. It drives into his garlanded chest. Ilakkuvaṉ feels its terrible force and collapses on the battlefield.