கம்பராமாயணம் 7266 · யுத்த 14.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயன்தந்த வேலினும் - (இந்த இலக்குவன் நான் எறிந்த) நான்முகன் கொடுத்த வேலினாலும்; அஞ்சினான் அலன் - பயந்து மயங்கியவனும் அல்லன்; ஆவி துஞ்சினான் அலன் - (அந்த அச்சத்தால்) உயிர் விட்டவனும் அல்லன்; துளங்கினான் - சோர்ந்துள்ளான் (அவ்வளவே); என்பது துணியா - என்பதனைத் துணிந்து; எஞ்சு இல் யாக்கையை - (வலி) ஒடுங்காத இந்த இலக்குவன் உடம்பினை; எடுத்துக்கொண்டு அகல்வேன் - (இப்போதே) எடுத்துக்கொண்டு (இலங்கைக்குள்) செல்வேன்; என்று எண்ணி - என்று நினைத்து; நஞ்சினால் செய்த நெஞ்சினான் - நஞ்சாலேயே செய்யப்பெற்ற நெஞ்சினையுடையவனான இராவணன்; பார்மிசை நடந்தான் - (இலக்குவனை நோக்கி) மண்மேல் நடந்து சென்றான்.
இராவணன் கொடிய மனத்தன் என்பதால், “நஞ்சினால் செய்த நெஞ்சினன்” என்றார் எதுகை தரும் இன்பத்தையும் ஓதியுணர்க. பிரமன் தந்த படையாதலின், அதற்கு ஒரு மதிப்புத் தரக்கருதிச் சிறிது அடங்கி நின்றான் பிரம்மாத்திரத்துக்குச் சுந்தர காண்டத்துள் அனுமன் மதிப்பளித்தது போல (கம்ப.5800) என்பாருமுளர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Judging that “He has not taken fright, nor, even from the spear Ayaṉ gave,
- has his life gone out; he is only stunned,”
- and thinking “I will lift up this body whose strength is unspent and carry it off,”
- he whose heart was made of poison walked down onto the ground.
What the poem says
Irāvaṇaṉ sees that Ilakkuvaṉ is neither terrified nor dead from Piramaṉ's spear, only stunned. He decides to pick up the body and carry him off into Ilaṅkai, and the demon king, whose heart is made of poison, steps down from his chariot onto the field to do it.
Some explain that Ilakkuvaṉ yielded briefly out of respect for Piramaṉ's weapon, as Aṉumaṉ earlier let himself be bound by Piramaṉ's missile.