கம்பராமாயணம் 7267 · யுத்த 14.209

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள்ளி வெம் பிணத்து உதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம்கைகள் இருபதும் பற்றிப் பண்டு அரன் மா
வெள்ளி அம்கிரி எடுத்தது வெள்கினான் ஏனை
எள் இல் பொன்மலை எடுக்கல் உற்றான் என எடுத்தான்.

பொருள் · Meaning in Tamil

உள்ளி - (இவ்வாறு) கருதி; வெம்பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி - கொடிய பிணங்கள் சிந்தும் இரத்தப் பெருக்கினில் விரைந்து போய்; அம்கைகள் இருபதும் பற்றி அள்ளி - (தன்னுடைய) அழகிய கைகள் இருபதினாலும் பற்றி வாரி; பண்டு - முன்பு; அரன்மா வெள்ளி அம்கிரி எடுத்தனன் - (பொன்மலையாகிய மேரு இருக்க) சிவபிரான் இருந்த பெரிய வெள்ளிப் பனிமலையாகிய கயிலை மலையினை எடுத்தவனாகிய இராவணன்; வெள்கினான் என - அச்செயலுக்கு வெட்கம் உற்றவன் போல; எள்ளில் பொன்மலை எடுக்கல் உற்றான் என எடுத்தான் - (அந்த வெட்கம் நீங்க) இகழ்வதற்கே வழியில்லாத (மகாமேருவாகிய) பொன்மலையை எடுக்க முனைந்தான் போல (இலக்குவனின் பொன்மயமான பேருடலை) எடுக்கலுற்றான்.

பொன் மலையாகிய மேருமலை மிகப் பெரியதாதலின் அதனை எடுக்காமல் பனிமலையை எடுத்தது இராவணன் உள்ளத்தில் ஒருதாழ்வுணர்வைக் கொடுத்திருந்தது. அதனை நீக்குவான் போல, பொன்னிறத்தனான இலக்குவனின் பொன்மலையொத்த உடலை எடுக்க இராவணன் சென்றான் என்று அழகுறத் தற்குறிப்பேற்றினார். உலோக மதிப்பிலும் பொன்னிலும் வெள்ளி தாழ்வுடையது ஆதல் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking thus, he rushed through the flood of blood pouring from the dreadful corpses,
  2. and gripping him with all twenty of his fair hands to scoop him up, as though he who had once lifted Araṉ's great
  3. silver mountain were ashamed of that feat
  4. and now set out to lift the flawless mountain of gold, he tried to lift him.

What the poem says

Ilakkuvaṉ lies senseless, struck down by Irāvaṇaṉ's spear, and Irāvaṇaṉ wades through the blood of the battlefield to carry him off.

The poet imagines a motive. Irāvaṇaṉ once uprooted Kailāsa, Śiva's silver snow mountain, but silver is the lesser metal: perhaps he felt that he had never lifted Mēru, the golden mountain. Now, as if to wipe out that shame, he tries to lift Ilakkuvaṉ, whose body is golden and vast as Mēru. This is a fanciful ascription of motive, a favourite figure of the poet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷḷi vem piṇattu utira nīr veḷḷattiṉ ōṭi
aḷḷi am kaikaḷ irupatum paṟṟip paṇṭu araṉ mā
veḷḷiam kiri eṭuttatu veḷkiṉāṉ eṉṉa
eḷ il poṉ malai eṭukkaluṟṟāṉ eṉa eṭuttāṉ.