கம்பராமாயணம் 7268 · யுத்த 14.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராமனுக்கு இளையோன் - இராமனின் இளையவனான இலக்குவன்; செம்பொன் அம்பரம் உடுத்த நாயகன் தான் என - செம்பொன் ஆடையாகிய பீதாம்பரம் உடுத்த தலைவன் ஆகிய திருமால் தானே என்று; ஒருங்கே உணர்தலின் - ஒருமைப்பாட்டுடன் நினைத்திருந்ததனால்; அடுத்த நல் உணர்வழிந்திலன் - பொருந்திய நல்உணர்வு நீங்காமலிருந்தான் (அப்போது) தொடுத்த எண்வகை மூர்த்தியை - அட்ட மூர்த்தங்களை ஒருசேரக் கொண்ட மூர்த்தியாகிய சிவபெருமானை; துளக்கி - அசைத்து; வெண்பொருப்போடு - வெள்ளிப் பனிமலையோடு; எடுத்த - தூக்கிய; தோள்களுக்கு எழுந்திலன் - (இராவணனுடைய இருபது வலிய) தோள்களுக்கும் அசைக்கமுடியாதவன் ஆனான்.
"அம்பரமே தண்ணீரே” (ஆண். திருப். [8) அம்பரம் - ஆடை. செம்பொன் ஆடையாகிய பீதாம்பரம் உடுத்தவன் திருமால். "பீதக வாடைப் பிரானார்" (பெரி. திருப். 9) அவன் ஆடை செம்பொன் நிறத்தது என்பது. "அந்திபோல் நிறத்து ஆடையும்" (திருப். அமல.3) "புலியின் அதள் உடையானும் பொன் ஆடை புனைந்தானும்" (கம்ப. 3069) எனுமிடத்து சிவன், திருமால் இருவரின் உடைகளும் ஒருசேரக் குறித்துள்ளது காண்க. எல்லாம் தான் என நினைத்த இராவணனால், எல்லாம் ஈசன் என நினைத்த இலக்குவனை எடுக்க இயலவில்லை என்க. எட்டு வடிவங்களைக் கொண்டவன் சிவபெருமான் ஆதலால், அவனுக்கொரு பெயர் "அட்டமூர்த்தி" என்பது. எட்டுவடிவங்களாவன: இருநிலனாய், தீயாக, நீருமாகி, இயமானனாய், எறியும் காற்றுமாகி, அருநிலைய திங்களாய், ஞாயிறாகி, ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி” (அப். தேவா. 0.94.1) என்பது காண்க. அட்ட மூர்த்தியாத் துலங்கும் சிவபெருமானை அசைத்த இராவணனால் இலக்குவனை அசைக்க இயலவில்லை என்று இலக்குவன் பெருமை இயம்பியவாறு. இலக்குவனும் திருமாலின் கூறே என இதனால் இயம்பியவாறுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He had not lost the good awareness that was with him: that the one robed in red gold,
- the Lord, was he himself; knowing this, wholly at one with it,
- for the arms that had shaken the Lord of the eight forms joined in one
- and lifted the white mountain, the younger brother of Irāmaṉ would not rise.
What the poem says
Irāvaṇaṉ cannot lift Ilakkuvaṉ. Even unconscious, Ilakkuvaṉ keeps his inner awareness that he is one with Tirumāl, the Lord who wears the golden-yellow robe, and so the twenty arms that once shook Kailāsa together with Śiva, the god of eight forms, cannot move him.
Śiva is called the Eightfold Form because he is earth, fire, water, the sacrificer, wind, moon, sun and sky. The point is that one who thinks himself everything cannot lift one who knows that everything is the Lord; the verse also hints that Ilakkuvaṉ is himself a portion of Tirumāl.