கம்பராமாயணம் 7271 · யுத்த 14.213

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித்துணை அல்லால்,
அகவு காதலால், ஆண்தகை என்னினும், அனுமன்,
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

தொக ஒருங்கிய - கூடி ஒன்றாகிய; ஞானம் ஒன்று எவரினும் - ஞானம் நிறைந்த யாவரிலும்; தூயோன் - தூயவனாகிய அனுமன்; ஆண் தகை ஆயினும் - இலக்குவன் பரம புருடனாகிய திருமாலேயாயினும்; தகவு கொண்டது ஓர் - தகுதி பெற்றதொரு; அன்பு எனும் தனித்துணையதனால் - அன்பு என்னும் ஒப்பற்ற துணையினாலும்; அகவு காதலால் - (அதனால்) தழைத்த பக்தியினாலும்; மகவு கொண்டு போய் - (இலக்குவனைத் தாவி எடுத்து); குட்டியைத் தாவி எடுத்துச் சென்று; மரம்புகு மந்தியை நிகர்த்தான் - மரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் தாய்க்குரங்கினை ஒத்து விளங்கினான்.

ஆண்டகை - புருடோத்தமன்; இராமன். இனி, ஆண்டகை என்பதனை அனுமனுக்கு ஆக்கி, ஆண் குரங்காயிருந்தும் இலக்குவனை அணைத்தெடுத்துச் சென்று காத்த நேர்த்தியால் பெண்குரங்கு அனைய அன்பினன் ஆனான் என்பார். "மகவு கொண்டு போய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்" என்றார் பக்தியும் அன்பும் உடையார்க்கு, இறைவன் எளியவன் என்னும் கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது. "பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்குரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்” (திருவாய். 1:3:1) என்னும் நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பாசுரத்திற்கு அரியதோர் விளக்க நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. நம்பிள்ளை தம் திருவாய் மொழியீட்டில் இந்நிகழ்ச்சியைக் காட்டி, இப்பாசுரப் பகுதியை இவ்வாறு விளக்குவார். "ஸ்ரீராமாவதாரத்திலும் இராவணன் படைகளுடன் கூடினவனாய்க் கொண்டு எடுக்கப் புக்க இடத்தில் நெஞ்சிற் புக்க பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்; திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில் செவ்வையாலே, கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான். இங்ஙன் அன்றாகில், "இராவணனுக்குக் கனக்க வேண்டும்” அன்றே? ஆதலால் பொருள் தன்மை இருக்கும்படி இது. இமயமலை, மந்தரமலை, மேருமலைகளையும் வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இருகைகளால் பெயர்த்து எடுக்க முடியும், போர்க்களத்தில் இராமனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன். "இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குவன், தூய்மையான மனமும் பக்தியும் பொருந்திய அநுமான் குரங்காக இருந்தும் எளிதாக எடுக்கத்தக்கவன் ஆனான்" என்பது ஸ்ரீராமாயணம். (திருவாய், ஈடு. 1:3:1)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Purest of all those in whom wisdom is gathered into one,
  2. through that matchless companion called love, worthy in itself,
  3. and through swelling devotion, though he was a manly hero, Aṉumaṉ
  4. was like a mother monkey carrying off her young into a tree.

What the poem says

Aṉumaṉ carries Ilakkuvaṉ as tenderly and as easily as a mother monkey carries her baby up into a tree. The phrase about the manly one can be read two ways: though Ilakkuvaṉ is the Supreme Person, Aṉumaṉ carries him like a child; or though Aṉumaṉ is a male monkey, his love makes him like a mother.

The lesson is that God, who cannot be moved by force, is easy for those who love him. The commentary links the scene to Nammāḻvār's line that the Lord is easy of access to devotees, and to a Vaiṣṇava commentary that cites this very episode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toka oruṅkiya ñāṉam oṉṟu evariṉum tūyāṉ
takavu koṇṭatu ōr aṉpu eṉum taṉit tuṇai ataṉāl,
akavu kātalāl, āṇtakai āyiṉum, aṉumaṉ,
makavu koṇṭu pōy maram pukum mantiyai nikarttāṉ.