கம்பராமாயணம் 7273 · யுத்த 14.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போன காலையில்- (அனுமன் அவ்வாறு) சென்றபோது; புங்கவன் - உயர்ந்தோனான இராமபிரானும்; ஆனைமேல் செலும் கோள் அரி ஏறு இவன் என்ன - யானையின் மேலே போர்க்குச் செல்லும் ஆற்றல் மிக்க சிங்க ஏறு இவன் என்று (கண்டோறி உரைக்குமாறு; போர்வேட்டு - போர்மேல் விருப்புற்று; புக்கனன் - (இராவணனை நோக்கிப்) புகுந்தான்; வானுளோர் கணம் ஆர்த்தனர் - (அப்போது அது கண்ட) வானத்திருந்த தேவர்கூட்டமாக (மகிழ்ச்சியால்) ஆர்ப்பொலி எழுப்பினர்; மலர்மேல் தூர்த்தனர் - (இராமபிரானின் மேலே) மலர் மாரி பொழிந்தனர்; தூ நவின்ற வேல் அரக்கனும் - ஊன் வாடை மிகுந்த வேல் தாங்கிய இராவணனும்; தேரினைத் துரந்தான் - (தனது) தேரினை (இராமபிரானை நோக்கிச்) செலுத்தினான்.
இறுதி வெற்றி சிங்க ஏற்றிற்கே உவமையால் உணர்த்தியவாறு இலக்குவன் மார்பில் அப்போது தான் புகுந்து வந்துள்ள வேல் ஆதலின், "தூ நவின்ற வேல்” என்றார். நவில்தல் - அமைதல். இலக்குவனை மயக்கமுறச் செய்த வேல் என்னிடத்திருப்பது எனும் செருக்கோடு தேரைத் திருப்பினான் எனும் குறிப்புத் தோன்ற, "தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினைத் துரந்தான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had gone, the Exalted One came in, longing for battle,
- so that men said, 'Here is a mighty lion going out against an elephant';
- the hosts in heaven shouted and strewed flowers upon him;
- and the demon with the spear that had tasted flesh drove his chariot on.
What the poem says
With Ilakkuvaṉ safe, Irāmaṉ himself advances against Irāvaṇaṉ. Onlookers liken him to a lion going against an elephant; the simile already hints at the outcome, since the lion wins. The gods cheer and rain flowers.
Irāvaṇaṉ's spear is called flesh-tasting because it has just pierced Ilakkuvaṉ's chest. He turns his chariot towards Irāmaṉ, proud that the weapon which felled the brother is still in his hand.