கம்பராமாயணம் 7275 · யுத்த 14.217
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாறில் போர் அரக்கன் - நிகரற்ற போர் புரிய வல்ல அரக்கன்; நொறில் - விரைந்து செல்ல வல்ல; நூறுபத்துடைத் தேரின் மேல்- ஆயிரம் குதிரைகளைக் கொண்ட தேரின் மேலிருந்து, நுன்முன் பொர - உன் முன்னர்ப் போரிடும் போது; நிலத்து - தரையிலே நின்று; நீ மலைதல் - நீ சண்டையிடுதல்; ஓர் வெறுமையை - ஒப்பற்றதொரு வெறுமைத் தன்மையை வேறு காட்டும் - தனியாகக் காட்டி நிற்கும்; ஐய- ஐயனே!; மெல்லிய எனினும் - மென்மையானவை என்றாலும்; என்னுடைத் தோளின் மேல் ஏறு - (அதனைப் பொருட்படுத்தாது) என்னுடைய தோளின் மேல் நீ ஏறுவாயாக; என்றான் - என்று வேண்டி நின்றான் (அனுமன்).
நூறுபத்து-ஆயிரம்; நொறில் பரி-விரைந்து செல்லும் குதிரைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While, on a chariot of ten hundred swift horses, before you,
- the demon unmatched in war is fighting, for you to fight on the ground
- plainly shows a want. Though they are slender,
- climb, my lord, upon my shoulders,' he said.
What the poem says
Aṉumaṉ speaks to Irāmaṉ. Irāvaṇaṉ fights from a chariot drawn by a thousand swift horses, while Irāmaṉ stands on the bare ground; the contest looks unequal. Modestly calling his own shoulders slender, Aṉumaṉ begs Irāmaṉ to mount them so that he too will fight from on high.